சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

மாணவர் சிறப்பு பஸ்கள் 10 நாளில் இயக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்!

மாணவர் சிறப்பு பஸ்கள் 10 நாளில் இயக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இன்று 5 பள்ளிக்கு செல்கிறேன். மாணவர்களோடு மதிய உணவு அருந்துகிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். காரைக்காலில் வாந்தி பேதியால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை. இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். வ...
பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார். இந்த செயற்கைேகாள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேட்வே என...
நவராத்திரி திருவிழாவில் வெளியாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’

நவராத்திரி திருவிழாவில் வெளியாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நவராத்திரி திருவிழாவில் வெளியாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வ...
சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா?  கோடங்கி விமர்சனம்

சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா? கோடங்கி விமர்சனம்   கிராமத்து மண் மணம், அதிரடி ஆக்‌ஷன், பறந்து பறந்து அடிக்கிற ஹீரோ, நெஞ்சைபிழிய வைக்கிற செண்டிமெண்ட், பஞ்ச்சமில்லாம மாஸான பஞ்ச் டயலாக் இதெல்லாம் ஒரு படத்துல இருந்தா அது கண்டிப்பா ஹரி இயக்கிய படமாதான் இருக்கும். கூடவே ஸ்மார்ட்டான அருண்விஜய் சேர்ந்தா மாஸ் எண்டடெய்னார்தானே… அதுதான் யானை. படத்து பேர் மாதிரியே படமும் திரைக்கதையும் நல்லா பலமா இருக்கு.   வழக்கம் போல ஹரி பார்முலாபடி ஊர்ல பெரிய தலைக்கட்டு PRV குடும்பம். இதுல சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி மூத்த தாரத்து பசங்க. ஜாதில ஊறிப்போனவங்க. அருண் விஜய் மட்டும் இரண்டாம் தாரமான ராதிகாவோட மகன். இவருக்கு ஜாதிய விட மக்கள் மேல பாசம் அதிகம். ஆனாலும் அண்ணன்கள் மேல அம்புட்டு பாசம்.   பெரிய தலைகட்...
பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம்

பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர்-நடிகர்  இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் "இரவின் நிழல்" திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்! இயக்குனர் திரு.பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான " புதியபாதை " முதல் கடைசியாக வெளியான " ஒத்த செருப்பு " வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார். ஒத்த செருப்பு 2019 ற்கான தேசிய விருது உட்பட பல உலக விருதுகளை பெற்றது. தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன் , தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார். உலகின் முதல் NON - LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார். அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் ...
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன் – ‘மெய்ப்பட செய்’ நாயகியின் அதிர்ச்சி தகவல்

நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன் – ‘மெய்ப்பட செய்’ நாயகியின் அதிர்ச்சி தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன் - ‘மெய்ப்பட செய்’ நாயகியின் அதிர்ச்சி தகவல் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு க...
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த மாதம் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. ஆனால் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை மீறி நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வ...
வைரலாகும் பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!

வைரலாகும் பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின்...
”லவ் டுடே”  டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்ட படகுழு!

”லவ் டுடே” டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படகுழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை படைத்தது. இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர். இப்படத்தின் போஸ்டர் த...
‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி!

‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  வி.எல்.சி.சி.-பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022 அழகிப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், 31 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெற்றிபெற்ற அழகிகள் பங்கேற்றனர். அதில் சிறந்த அழகியை தேர்வு செய்ய நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினிஷெட்டி 'மிஸ் இந்தியா வேர்ல்டு 2022' பட்டத்தை வென்று முதலிடத்தை பிடித்தார். பின்னர் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த ரூபல்ஷெகாவத் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுகான் 3-வது இடத்தையும் பிடித்தனர். நடிகைகள் நேகாதுபியா, மலாய்கா அரோரா, நடிகர் டினோமோரியா, வடிவமைப்பாளர்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குனர் ஷியாமக்தவார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி...