அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!
அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம்
வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!
குஜராத் மாநிலத்தில், 2005–ம் ஆண்டு, சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி, மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய சகோதரி, 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்...









