வியாழக்கிழமை, ஜூன் 25
Shadow

Author: Kodanki

அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்ற ரஜினியின் பேச்சால் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..! சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவரும் ரஜினி அரசியல் அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவரோ, தன் நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாக சிறிது நேரம் ரசிகர்களிடையே உரையாற்றுகிறார். அரசியல், பொதுவாழ்க்கை குறித்தே அவரது பேச்சு அமைந்திருந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அவரது பேச்சு தனது திரையுலக வாழ்க்கையை பற்றியே அமைந்திருந்தது. “என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973இல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். சென...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஆய்வு!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிவந்தனர். இதையடுத்து, வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, வேதா இல்லத்தை முழுமையாக அரசுடையாக்கும் பணிகள் இன்று (டிசம்பர் 30 ) தொடங்கின. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் வட்டாட்சியர், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் இன்று காலை வேதா இல்லம் வந்தனர். சசகலாவின் அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வருமான வரித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் வீட்டை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது சீல் வைக்கப்பட்டிர...
ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

ஆண்டு கடைசி நாளில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச் பட டைட்டில் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஸ்கெட்ச் படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைக்க, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு ‘வி கிரியேஷன்ஸ்’மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் கனவே கனவே, அட்சி புட்சி, சீனி சில்லாளே ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டைட்டில் பாடல் வ...
உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்

CINI NEWS, MOVIES, REVIEWS, டிரைலர்கள், திரைப்படங்கள்
அன்பான அக்காவையும், மாமாவையும் கொடூரமாக கொல்லும் கந்து வட்டி கும்பலை அவர்களோடு ஒருவனாக பழகி பழி வாங்க நினைப்பதே உள்குத்து. தலைப்பு ரொம்ப அழுத்தமாக இருக்கிறது. அந்தளவுக்கு படம் இருக்கிறதா... முட்டம் என்ற மீனவக் குப்பத்தின் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) அதே பகுதியில் பில்டப்பில் காலத்தை ஓட்டும் சுறா சங்கர் (பால சரவணன்) தன் வீட்டுக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் அவரது தங்கை கடலரசியும் அவனது பாட்டியும் உள்ள அந்தச் சிறிய குடும்பத்தில் இணைகிறான் ராஜா. அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்கா மணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) படகு செய்யும் தொழில் செய்துகொண்டே கந்து வட்டி தொழிலையும் செய்துவருபவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, ச...
கழிவறையின் முக்கியத்துவம் குறித்து  த்ரிஷா விழிப்புணர்வு

கழிவறையின் முக்கியத்துவம் குறித்து த்ரிஷா விழிப்புணர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த்ரிஷாவுக்கு, அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு மட்டுமல்லாது சமூக விழிப்புணர்விலும் ஈடுபட்டுவரும் த்ரிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்துக்கு வருகை புரிந்தார். அங்குக...
புதுமுகங்கள் நடிக்கும்“ செயல் “

புதுமுகங்கள் நடிக்கும்“ செயல் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..  இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம். சென்னையில் “ டே மாமா வ...
2017 வைரலான செல்ஃபி படங்கள்

2017 வைரலான செல்ஃபி படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்கள். ஏன், இருவருக்கும் ரகசியமாக கேரளாவில் திருமணம் நடந்துவிட்டதாகக் கூட கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் நயன்தாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.   ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமணத்திற்கு வந்தார். அவர்கள் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. நடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின   ...
காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

காலத்திற்கும் நினைவில் இருக்கும் அறம் கொடுத்த நயன்தாராவுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள் – விக்னேஷ் சிவன்

CINI NEWS, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் -இயக்குனர் விக்னேஷ் சிவன் மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டார்கள் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த படம் அறம். அறம் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஹிட்டாக்கிவிட்டனர். அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது ஒரு நல்ல படம் வென்றால் அது எப்பொழுதுமே மக்களின் வெற்றி. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கும் அறம் குழுவுக்கும் வாழ்த்துக்கள் என ட்வீட்யுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்....
ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கனவு காண்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று அவர் கூறினார். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான இயக்கம் என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்றும் தினகரன் தெரிவித்தார். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். சிலர் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் இந்த ஆட்சி விரைவில் கவிழும் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறி வருக...
அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்...