டபுள் ஆக்குபன்சி விமர்சனம் 3/5
டபுள் ஆக்குபன்சி விமர்சனம் 3/5
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.
ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை. ஓருடல் காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணிவரை பெண்ணாகவும் மாலை ஆறுமணி முதல் காலை ஆறுமணி வரை ஆணாகவும் இயங்குகிறது.
இருவரும் தனித்தனி வேலை செய்கிறார்கள்.தனித்தனி காதல் செய்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும்?
கதைப்படி… திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, போஸ் வெங்கட் – வினோதினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
ஆனால், அந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருப்பதால், உயிர் பிழைக்க கடவுளிடம் வேண்டுகிறார், போஸ் வெங்கெட். அதன் பலனாக போன குழந்தை உயிர் திரும்ப வருகிறது. இரட்டிப்பாக. அதாவ...









