‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்
'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன'- ஸ்ருதிஹாசன்
ஆர்வம் மற்றும் விடாமுயற்சி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன், 'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன 'என தெரிவித்துள்ளார்
முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சா...









