Author: Kodanki
தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சி கலையும்- டிடிவி தினகரன்
தை பிறந்தால் வழி பிறக்கும் ஆட்சி கலையும் என்று திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கடந்த அக்டோபர் மாதம் சொன்ன தினகரன் அதை நினைவூட்டும் வகையில் அடுத்த கட்ட செயல்களை செய்து வருகிறார். பொங்கல் வாழ்த்து கூறும் போதே கிலி ஏற்படுத்துகின்றனர் அரசியல் கட்சியினர்.
தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும் என்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அதே போல வாழ்த்து கூறியுள்ள டிடிவி தினகரனோ, பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சட்டசபையில் எம்எல்ஏவாக தனது செயல்பாடுகளை காட்டிய தினகரன், நேற்று சசிகலாவை சந்தித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வந்திருக்கிறார். கட்சி மற்...
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வ...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..!
வாழ்வில் மாற்றத் “தை”
தொழிலில் ஏற்றத் “தை”
வசதியில் உயரத் “தை”
உலகுக்கு வீரத் “தை”
தேவையான பணத் “தை”
அளவில்லாத செல்வத் “தை”
எல்லாரோடும் சமாதானத் “தை”
எப்போதும் சந்தோஷத் “தை”
குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும்,
நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும்.
இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..!
அன்புடன்
கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொட...
‘இந்தியன் 2’ பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!
'இந்தியன் 2' பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது '2.0' இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தின் காட்சி உருவாக்கத்தில் ஓவியத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை சமீபத்திய திரைப்படங்கள் மூலம் நிரூபித்தவர் விஸ்வநா...
ஆண்டாள் சர்ச்சை… வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!
ஆண்டாள் சர்ச்சை... வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!
ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எ...
உலகின் மிக வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்
சவுதியின் வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்
சவுதியின் வயதான நபர் தனது 147 வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. நாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி. 147 வயதான இவர் கடந்த வாரம் மூளை பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார்.
யாருக்கும் சாத்தியமில்லாத அளவில் இவ்வளவு ஆண்டுகள் ஷேக் எப்படி வாழ்ந்தார் என்பது குறித்து அவரின் குடும்பத்தார் விளக்கமளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இயற்கை உணவுகளை தான் ஷேக் சாப்பிடுவார். எப்போதாவது மட்டுமே காரில் பயணிக்கும் அவர் அதிகளவில் நடப்பதையே விரும்புவார்.
ஒரு சமயம் அப்ஹாலிருந்து மெக்காவுக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) நடந்தே ஹஜ் பயணம் சென்றார். தனது நிலத்தில் விளையும் கரிம தானியங்கள், கோதுமை, மக்காச்சோளம், பார்லி மற்றும் தேனை தான் ஷேக் சாப்பிடுவார்.அவரின் பண்ணை வ...
சசிகலா அறையில் குட்கா ஊழல் ஆவணம்..!
சசிகலா அறையில் குட்கா ஊழல் ஆவணம்..!
குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் குட்கா தொடர்பாக தாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது. சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து வருமான வரித்துறை துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளித்துள்ளது.
வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது.
2016 ஏப். 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக பதில் மனுவில் தகவல் ...
சீர்குலைந்த நீதித்துறை நிர்வாகம்…தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டி நீதிபதிகள் பகீர் பேட்டி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல்: நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல் குறித்து இந்திய பார் கவுன்சில் டெல்லியில்...

