ரஜினியும், மணிரத்னமும் என்னுடைய இன்ஸ்பிரேசன் – லைகா குழும தலைவர் சுபாஸ்கரன்
ரஜினியும், மணிரத்னமும் என்னுடைய இன்ஸ்பிரேசன் -
லைகா குழும தலைவர் சுபாஸ்கரன்
என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி -
மணிரத்னம்
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதி...









