வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:- ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர். இதில் 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்திய...
பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்க...
ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள “பவுடர்”.

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள “பவுடர்”.

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் - திரைக்கதை எழுத்தாளர் - நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவ...
விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தேர்தல்!

விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தேர்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை உறுப்பினராக கொண்டு இயங்கி வருகிறது தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா). இந்த சங்கத்தின் 2022- 2025 க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். வைகிங் ஈஸ்வரன் அணி, பிரியா ஒசைரிஸ் பாலசந்தரை துணை தலைவராக நிறுத்தி மாற்றத்திற்கான அணி என இரண்டு அணியாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிற பதவிகளுக்கு மொத்தம் 52 பேர் போட்டியிட்டனர். திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சைமா சங்க வளாகத்தில் இன்று காலை 9மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதியம் 2 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவி என மொத்தம் 5 ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ...
போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் ...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், தமிழக அரசியல்
தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும். இதை தொடங்கி வ...
எந்த படத்தையும் நான் இப்படி பார்த்ததில்லை – தயாரிப்பாளர் எஸ்.தாணு !

எந்த படத்தையும் நான் இப்படி பார்த்ததில்லை – தயாரிப்பாளர் எஸ்.தாணு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு 'நானே வருவேன்' திரைப்படம் குறித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'நானே வருவேன்' திரைப்படம் முதல் நாள் வசூல் அள்ளி விடும். இரண்டாவது ...
நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்!

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்! ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதை தான் "ரவாளி". கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்து, கதாநாயகனையே படத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகி...
அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது !

அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும...