போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது.
இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது.
போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 5-ந்தேதி எழுதிய கடிதத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி போதை பொ...









