பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது. இரு வாரங்களில் 11 பேரும் சிறையில் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2002 பிப்.27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. கோத்ராவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாகோத் நகர் அருகில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேரை காணவில்ல...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழாவில் ஆற்றிய சிறப்புரை:
திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து - என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா அவர்கள். தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலே...
பத்திரிகை செய்தி
தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை...
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று(28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி காலமானார்.
அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் சங்கம் சார்பில் முக்கியமான 3
கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்:
1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகா...
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய
பத்து சட்ட முன்வடிவுகளுக்கு
ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!
வைகோ அறிக்கை
தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவம்பர், 10 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யா...
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துக்கள்
நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.
அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை.
சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார்.
கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர்,பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்..
'டூப்' போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் ..
'மீண்டும் ஒரு சூர்யோதயம்' -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.
...