சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

“காணும் பொங்கல்” கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!

“காணும் பொங்கல்” கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
"காணும் பொங்கல்" கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!! தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் வெளியே கூடாமல் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31ம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காணும் பொங்கல் முன்னிட்டு குடும்பத்துடன் கடற்கரை, சுற்றுலா தளங்கள், கோவில் பூங்காக்கள்,...
ஓமிக்ரான் பரவலை அடுத்து சீனாவை உலுக்கும் அடுத்த தொற்று!

ஓமிக்ரான் பரவலை அடுத்து சீனாவை உலுக்கும் அடுத்த தொற்று!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  சீனாவில் புதிதாக பரவும்  பறவைக் காய்ச்சல் சீனாவில் முக்கிய சில நகரங்கள் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிதாக பரவும் பறவைக் காய்ச்சலுக்கு ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சிச்சுவான் மாகாணம், ஜெஜியாங் மாகாணம் மற்றும் குவாங்சி தன்னாட்சிப் பகுதி ஆகியவையில் பறவைக் காய்ச்சல் கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளம் காணப்பட்டன. இதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில் எஞ்சிய மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதர்களிடம் இருந்து இந்த நோய் பரவவில்லை என உலக சுகாதார அமைப்...
நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்!

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கனடா மருத்துவர் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கனடா மருத்துவர் ஒருவர் அவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார். டொரண்டோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். விமானம் தரையிறங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது, திடீரென விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என விமானப் பணிப்பெண்கள் கேட்க, ஆயிஷா எழுந்து என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். விமானத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இடையடுத்து உடனடியாக விமானத்திலிருந்த செவிலியர் ஒருவரும், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் டாக்டர் ஆயிஷாவுக்கு உதவிக்கு...
ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  ரயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட என்று கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான VOK தெரிவித்துள்ளது. இந்த மாதம் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடலில் சோதனை செய்ததை கண்டறிந்ததாக தென் கொரியாவின் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வந்தது.   பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகம் வட கொரியாவின் முந்தைய சோதனைகள் மீது புதிய தடைகளை விதித்ததற்காக அமெரிக்காவை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை தொடர்ந்தால் வலுவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது...
கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!

flood news, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்கா தீவைத் தாக்கிய ஆழிப் பேரலைகள்..!   சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்கா நாட்டில் பல தீவுகள் உள்ளன. இவற்றில் ஒரு சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன. டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!

நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு! ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள். ஆனால் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராஃப் போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக பிம்மிஹால் என்பவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்போனது வேறு டாக்டர்.  அப்போது அந்த கல்லீரலில் ஒரு இனிசியல் இருப்பதை பார்த்து அந்த டாக்டர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக அதனை போட்டோ எடுத்து மருத்துவமனை நிர்வா...
மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை -கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை -கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை -கேரள உயர்நீதி மன்றம் அதிரடி மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல மாலான லுலு மால் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மால்களில் வாகன கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கரம் வாகனம் முதல் 4 சக்கர வாகனம் வரை,பார்க்கிங் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான லுலு மாலில் வசூலிக்கப்படும் ...
பொங்கலன்று ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!

பொங்கலன்று ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழ்நாடு முழுவதும்  பொங்கல் பண்டியையொடி,நேற்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு  டாஸ்மாக் மது பானங்கள்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  மாட்டு பொங்கல் விழாவும், திருவள்ளுவர் தினமும்  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக விடுமுறைள் இயங்காது என்பதால், மது பிரியர்கள் பெட்டிப்பெட்டியாக மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக   மதுரையில் ரூ68.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல வாரியாக சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், ...
புதிய போர் சீருடையை காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்!

புதிய போர் சீருடையை காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை முதல் முறையாக வெளியிட்டது. பாராசூட் படைப்பிரிவின் கமாண்டோக்கள், புதிய சீருடையில் அணிந்து, ராணுவ தினமான இன்று டெல்லி கான்ட் அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுத்துச் சென்றுள்ளனர். 2022 ராணுவ தின அணிவகுப்பில் ராணுவம், தனது புதிய போர் சீருடையை வெளிப்படுத்தும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது. படையின் பல தசாப்த கால போர் மாற்றியமைக்கும் புதிய சீருடை, பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியதைப் போன்ற டிஜிட்டல் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் (NIFT) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சீருடை, வீரர்...
இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு அவருடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணை முல்லைப் பெரியாறு அணை என்பதும், இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது என்பதும், இந்த அணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது என்றாலும் தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கடந்த 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட போது மேஜர் ஜான் ...