கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!
பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.
இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்...









