பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?
பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?
குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பதவிக்காக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதால், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர போட்டியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹா பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை வந்தடைந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் முதலம...









