சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார். கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். ...
சிம்புவின் 45வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

சிம்புவின் 45வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தின் வேலைகள் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், சிம்புவின் 45வது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். நாயகி, இசையமைப்பாளர் உட்பட மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு....
அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம். மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருக...
தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
  தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது.   தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். ரஜினிகாந்தின் வருகையால், ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது ரஜினிக்கு இடது கைக்கு பதிலாக வலது கை விரலில் மை வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரம் பெரிதாக ப...
லாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி

லாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்...
அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. முத்து கோபால் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். அரசியல் பிரமுகராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் 'அச்சமில்லை அச்சமில்லை பட குழிவனருக்கு வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்துள்ளார். பரபரப்பான தேர்தல் அரசியல் முக்கியமான நேரத்தில் சினிமா டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன...
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில்  பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்... அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற...
தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்  – சீமானுக்கு பிரபல  நடிகர்  கடும் எச்சரிக்கை

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் படிக்கும் போது கண்டிப்பாக சீமான் மட்டுமே நினைவுக்கு வருவார்.   லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை;   *"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!"* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்"* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *"நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?"* என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும்......
தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி தமிழக அரசியல், தமிழ் சினிமா , பொது வாழ்வு , சமூக சேவை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து பலரை கை தூக்கி விட்ட சகோதரர் ஜே.கே.ரித்திஷ் அவர்களின் திடீர் மரணம் பெறும் அதிர்ச்சியையும், சொல்ல முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் பலரை உயர்த்தி அழகு பார்த்தவரை இறைவன் இத்தனை சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொண்டதை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது. கஷ்டம் என்று தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து மகிழ்ந்த சகோதரனை இத்தனை சீக்கிரம் எங்களிடம் இருந்து எடுத்து கொண்டது நியாயமா என்று இறைவனை கேள்வி கேட்கத் தோன்றுகிறது. பாசம் மிக்கவரை இழந்து வாடும் அன்னாரின் மனைவி குழந்தைகள் துக்கத்தில் தமிழ் ...
எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..! நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மறந்து போன ரிட்டைர்டு நடிகை. வயசும் ஓடிப்போச்சி... இளமையும் இல்லாம போன பா(ர்)ட்டி நடிகை ஆனபிறகும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று பிரபலங்களை அவ்வப்போது வம்புக்கு இழுத்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் பா(ர்)ட்டி. நேற்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் தொகுப்பாளினி வேலை செய்த பின் அந்த தயாரிப்பு நிறுவன செலவில் அதே நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து ரொம்பவே"உற்சாக "மாக சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்திருப்பார் போல... அந்த விளையாட்டை நக்கல் அடிப்பதாக நினைத்து தேவை இல்லாமல் ஒரு டிவிட் போட... அது சிக்கலில் முடிந்திருக்கிறது. சிலர் வாயை கொடுத்து...... புண்ணாக்கி கொள்வார்கள். இந்த பப்ளிசிட்டி பா(ர்)ட்டி தன் கையை வைத்து தானே சூடு கட்டையை எடுத்து சொறிந்து கொண்டுள...