செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

NEWS, செய்திகள்
      தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று, அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மத்திய மற்றும் தென் கிழக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அந்தமான் கடற்பகுதியில் வருகிற 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மித...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார் என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் - சௌந்தர்யா தந்தை சாமிநாதன். வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன். வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார். என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு. தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு - சாமிநாதன் என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் - சாமிநாதன்...
முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்... வென்ற இபிஎஸ்... நடந்தது என்ன!? அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் 1991ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை முதல்வர் வேட்பாளர் ஆக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் புதிய முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகி இருக்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மக்கள் முன்பு களம் இறங்குகிறார்கள். மக்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியவரும். ஆனால், முதல்வர் வேட்பாளர் ஆக வரவேண்டும் என பல கட்ட முயற்சிகள் செய்த முன்னாள் முதல்வர் இப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென சமரசம் செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி இப்போது அனைவரிடமும் எழும்புகி...
கனிமொழி MP மீது 5 பிரிவுகளில் வழக்கு

கனிமொழி MP மீது 5 பிரிவுகளில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி. மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு. சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு....
கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, “அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரு...
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார். முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதி...
நம்புங்கோ கடத்தல 10 வருஷ லவ்… இது லவ் மேரேஜ் என்கிறார் அதிமுக எம் எல் ஏ.

நம்புங்கோ கடத்தல 10 வருஷ லவ்… இது லவ் மேரேஜ் என்கிறார் அதிமுக எம் எல் ஏ.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  *காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்* பெண்ணை கடத்தி வந்து தான் திருமணம் செய்ததாக வரும் செய்தி தவறு என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார். தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அவரது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். https://youtu.be/SycBVSV36Mk இந்த நிலையில், முறைப்படி பெண் கேட்டும் தரவில்லை என்பதால் தனது பெற்றோர் முன்னிலையில், செளந்தர்யாவின் முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்றும், செளந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்ததாக வரும் செய்தி வதந்தி என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார்....
2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவததிற்கான நோபல் பரிசு அறிவிப்பு.