டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு ; டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் ஒரு நாள் உண்ணாவிரதம்!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட இருப்பதாக திமுக தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன. வருகின்ற 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்கள...









