செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார். அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார். அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இ...
கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..! தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
12 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம்..!

12 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.   விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்....
வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு... அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..! திருப்பதியில் விஐபி நுழைவு என்னும் சிறப்பு வசதி மூலம் வரிசையில் நிற்காமல் ஏழுமலையானை தரிசிக்கும் முறையை நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று மணி கணக்காக, நாள் கணக்காக வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். ஆனால் பணம் படைத்த சிலர் ஒரு சில கணிசமான தொகையை செலுத்தி விஐபி பாஸ் என்ற பெயரில் குறுக்கு வழியில் எளிதாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி கும்பிடுவதில் கூட ஏழைக்கு ஒரு சலுகை, பணமிருப்பவருக்கு ஒரு சலுகையா என பொதுமக்கள் இதனால் குறைப்பட்டு கொள்கிறார்கள். மேலும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் உறவினர்கள் என பலர் இந்த விஐபி பாஸை தங்கள் சுய தேவைக்கு...
தமிழக பாஜக பரபரப்பு…  தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு... புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..! தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருக...
இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் ...
நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. "தண்ணி" யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..! தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை குறித்து பேசுவதற்கு பதில் குடியை கொடுக்கும் குடிக்கு ஆதரவான கருத்தை சட்டசபை கூட்டத்தில் கோரிக்கையாக வைத்த மக்கள் விரோத எம்.எல்.ஏ. தண்ணியரசு... சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருப்பதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு அதிக நேரமாவதாகவும், எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். தனியரசு எம்.எல்.ஏவின் இந்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தால...
“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
"பொறுக்கி" வாய்சுக்குத்தான் லாயக்கு... விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!   பொது வெளியில் அவதூறாக கருத்திட்டு விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் டப்பிங் யூனியன்..! ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அத்தனை சீக்கிரம் பொது வெளியில் கருத்து பதிவிடுவதில்லை. இதற்கு காரணம் ராதாரவி என்கிற ஒரு நபரின் முழு கட்டுப்பாட்டில் தான் டப்பிங் யூனியன் செயல்படுகிறது. நிர்வாகத்தை எதிர்த்து கருத்து பதிவிடுபவர்களை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத படி செய்து விடுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பாடகி சின்மயி. இப்போது நடிகர் விஜய் சேதுபதி மீது டப்பிங் சங்கம் திடீரென பாய்ந்திருக்கிறது. அந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை மிக அவதூறான வார்த்தைகளில் வசை பாடி கமெண்ட் போட்டிருக்கிறார். ரா...
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை - மத்திய மந்திரி சபை ஒப்புதல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. கடுமையான தண்டனை வழங்குவது குழந்...
மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..! நந்தினி இந்த பெயர் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ மதுப்பிரியர்களுக்கும், மது ஒழிப்பு போராளிகளுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும், குறிப்பாக போலீசுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்தினி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நேரத்தில் மது உணவு பொருளா என எதிர் கேள்வி கேட்டதால் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் நந்தினி சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் வந்தது. இதனால் திருமணம் தடைபட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த நந்தினிக்கும் – குணா ஜோதிபாசுவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடை பெற்றது....