ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16
Shadow

NEWS

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கா...
வசூலில் முன்னேறும் ‘பதான்’.. கொண்டாடும் ரசிகர்கள்!

வசூலில் முன்னேறும் ‘பதான்’.. கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்....
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்...
வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள் தொடங்க நித்யானந்தா திட்டம்!

வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள் தொடங்க நித்யானந்தா திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார். இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைத...
3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்!

3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்.. காரணம் இதுதான்!* கடந்த 3 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜெண்டினா வந்துள்ளனர். ஒரு நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே போல் அர்ஜெண்டினாவில் கடைபபிடிக்கப்படும் நடைமுறைகளில் ஒன்று அந்நாட்டில் யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கி விடுகிறது. இதை யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் என விசா பெற்றுக்கொண்டு அங்கு செல்லும் நிறைமாத கர்ப...
பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு நடவடிக்கை!

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளை ஆக்ரமித்து சிற்பக் கூடங்கள், வீடுகள், பட்டறைகள், ஈரால் மீன் பண்ணைகள் அமைத்து ஆக்ரமிப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலத்தில் நீர் வரத்து பாதிக்கப்பட்டது. குப்பைகள் ஒதுங்கி சுற்றுச்சூழல் மாசடைந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆக்ரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்ரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு எல்லை நிர்ணயம் செய்வதற்காக எல்லை கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்....
அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார். பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். "அதானி உடனான உறவு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடி, தனது நண்பர் அதானியை பாதுகாக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் நேற்று அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பணவீக்கம் பற்றி பேசுவதுகூட இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பற்றி குறிப்பிடக்கூட இல்லை. ஏனென்றால், பிரதமர் பணவீக்கத்தையும் சரி, வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி கண்டுகொள்வதே இல்லை. பிரதமர் மோடி எத...
ரசிகரின் தந்தை சிகிச்சைக்கு உதவி செய்த அல்லு அர்ஜுன்.. குவியும் வாழ்த்து!

ரசிகரின் தந்தை சிகிச்சைக்கு உதவி செய்த அல்லு அர்ஜுன்.. குவியும் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில் ரசிகர்களான தங்களில் ஒருவரின் தந்தை நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தி அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு சென்றுள்ளது. ரசிகரின் இந்த நிலை...
கடலுக்கு அடியில் திருமணம் செய்ய அதிகம் முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகள்!

கடலுக்கு அடியில் திருமணம் செய்ய அதிகம் முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்ட மான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள். தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகி...
வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்....