சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் வேட்பாளர் செலவை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

ஜெ., வீடு தீபா- தீபக் இருவருக்கும் கோர்ட் நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம் ;* தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது * வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல் * நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு...
உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு* பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார். உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்....
நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்-தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள். “இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா" தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% - 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்....
முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர்  ஸ்டாலின் சந்தித்தார்!

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். முதலமைச்சரின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை....
முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர். ஷாக் ஆன பாமக வட்டாரம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மா தவசாயி சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் அறிக்கை வெளியிட்டனர். இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தேர்தல் பரபரப்பு சூழலில் இந்த ஆறுதல் சந்திப்பு கூட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒட்டுமொத்த வன்னியர்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என தேர்தலுக்கு தேர்தல் சொல்லி தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் பாமகவுக்கு முதல்வரை வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தது பெரும் ...
கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கிய இளவயது பெண் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்தின் பிரைம் மினிஸ்ட்ரா சன்னா மரீன் பதவி வகிச்சு வாரார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை 37 வயசான இவருக்குண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிச்சு. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது. இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திச்சு. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலை...
பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையால் ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் – திருமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ள ’நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் இந்தத் தேர்வுமுறை தனிப்பயிற்சி நிலையங்களின் கொள்ளைக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கின்றன. எனவே,நீட் தேர்வை ரத்து செய்ய இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற மாணவர் ஜீவித்குமாருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பது என்பது அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றிப...
தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

தேர்வு முடிவுகள் குளறுபடியால் நீட் தேர்வின் முறைகேடுகள் இந்தாண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு”* நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசிய தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. மாணவ மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பா.ஜ.க. அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை. சில மாநிலங்களில் நீட் தேர்வை எழுதியவர்களை விடவும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாடுமுழுவதும் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான சர்ச்சை நெடுகிலும் வலுத்ததை அடுத்து, தேசியத் தேர்வு முகமை, முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகத் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...