சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது. நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். அத்துடன், ரிசர்வ் வங்கி...
பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  இருதய மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சிகரம் என்று வர்ணிக்கப்பட்ட ஒரு ஆபரேஷனில் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க நபர் டேவிட் பென்னட் (57) அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மேரிலேண்ட் மருத்துவமனை மார்ச் 9ம் தேதி இதனை அறிவித்தது. டேவிட் பென்னட், 57, மார்ச் 8 அன்று மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இறந்தார். மருத்துவர்கள் மரணத்திற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை, சில நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது என்று மருத்துவமனை கூறியது. பல ஆண்டுகளாக மருத்துவர்கள் உயிரைக் காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்த முயன்றனர். மேரிலாந்தில் உள்ள ஹேகர்ஸ்டவுனைச் சேர்ந்த ஒரு கைவினைஞரான பென்னட், இந்த புதிய முயற்சிக்கான நபராக இருந்தார், ஏனெனில்...
உக்ரைன் போரால் இந்தியாவுக்கு இடம் பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

உக்ரைன் போரால் இந்தியாவுக்கு இடம் பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
1 லட்சம் பேர் வேலை இழந்தனர்! உக்ரைன் போரின் தாக்கம் தகவல் தொழில் நுட்ப துறையிலும் எதிரொலித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு பல இந்தியாவில் இருந்தபடியே பலர் பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஷியா - உக்ரைன் போரால் தகவல் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ரஷியா மற்றும் உக்ரைனில் நிலவும் போர் பதட்டத்தால் அங்குள்ள பல ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம் பெயரவும் திட்டமிட்டுள்ளன. இதேபோன்று தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் ஐ.டி. நிறுவனங்கள் வலுவாக காலுன்றவும் முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன....
பலூன் விற்கும் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட திருப்புமுனை!

பலூன் விற்கும் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட திருப்புமுனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர் காவு பரசுராமன் கோவிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடமாநில பெண் கோவில் வாசலில் அமர்ந்து பலூன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் கிஸ்புவை புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவர் தாயாரிடமும் காட்டினார். பின்னர் அந்த படத்தை அவர்களின் அனுமதியுடன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலானது. புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் பதிவிட்ட படங்களில் இந்த படம் அதிகமாக பகிரப்பட்டது. இதையடுத்து கிஸ்புவை வைத்து மாடலிங் போட்டோ ஷூட் நடத்தவும் முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். மேக்கப் கலைஞர் ரம்யா பிரஜுல் கிஸ்புவை மாடலிங்குக்கு ஏற்ப அலங்காரம் செய்தார். பின்னர் மா...
திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு!

திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து சென்று வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து கட்டண டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்த...
சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது....
போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். டுவிட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:- மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார்....
இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் மகளிர் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும். கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்திய...
சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

சட்டபூர்வமாக பிரிந்த இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பத...
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவிட்டுள்ளார். அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ...