சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

முதல்வர் ஸ்டாலின் முதிர்ச்சி நிறைந்த தலைவர் – டாக்டர் திருமாவளவன் எம்.பி.பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் முதிர்ச்சி நிறைந்த தலைவர் – டாக்டர் திருமாவளவன் எம்.பி.பாராட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்ட  அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமிடையே குழப்பங்கள் ஏற்பட்டு நாடுதழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, திமுகவுக்கு எதிராக அவை அனைத்துத் தரப்பினரின் பேருரையாடலாக மாறின. இத்தகைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சில கருத்துகளை வெளியிடும் நிலை உருவானது. அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் பறிபோன உரிமைகள் ஒரு புறமிருந்தாலும் கூட்டணியின் மீதான நன்மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. அதனடிப்படையில் "கூட்டணி அறத்தைக்" காப்பாற்ற வேண்டுமென விசிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக மாண்புமிகு ம...
சசிகலாவை திடீரென ஓபிஎஸ் தம்பி சந்தித்ததால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு!

சசிகலாவை திடீரென ஓபிஎஸ் தம்பி சந்தித்ததால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்செந்தூர் வந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்...
கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் To மேயர்… அசர வைக்கும் காங்கிரஸ்!

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் To மேயர்… அசர வைக்கும் காங்கிரஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
கோயில் நகரமான கும்பகோணத்தை தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிச்சு தனி மாவட்டமா அறிவிக்க வேண்டும் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கபட்டுவருது. அதை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநகராட்சி ஆனபிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் முதல் மேயர் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு திமுக வட்டாரத்தில் எழுந்துச்சு. கும்பகோணம் மாநகர் பொருப்பாளர் சு.ப.தமிழழகனுக்கு மேயர் வாய்ப்பு அதிகம் என பலதரபட்ட மக்களிடமும் பேசப்பட்டுச்சு. ஆனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பொறுப்பை திமுக வழங்கிய நிலையில் காங். வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநராக இருந்துவரும் சரவணன் என்பவரை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. சரவணன் கும்பகோணம் துக்காம்பாளைத்தை சேர்ந்தவர், அவரது தந்தை கந்தசாமி. பத்தாம் வகுப்பு மட்டுமே படிச்சிருக்கும் சரவணன் காங்கிரஸ் கட்ச...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே காலமானார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே காலமானார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்....
பீகாரில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

பீகாரில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பீகார் மாநிலம் பாகல்பூரின் டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதன் தாக்கத்தால் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்ததுடன், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இந்த  வெடிவிபத்தில்  ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். வெடி விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்தவர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வெடிகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என பகல்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளத...
போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

HOME SLIDER, NEWS, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதி...
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  பதவி ஏற்றார் பிரியா!

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார். மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங்கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேயர் அணியக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு கமி‌ஷனர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்களுக்கு தங்க சங்கிலி அணிவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக மேயர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அந்த தங்க சங்கிலி வங்கியில் ...
தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவருக்கு எதிராக கோஷமிட்டதாக கைது செய்யப்பட்ட சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநரும், அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், அங்கிருந்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோபியா மீது விமான நிலைய அதிகாரியிடம் தமிழிசை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் சோபியாவை கைது செய்தனர் இந்த வழக்...
3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது!

3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன. இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர்’ தான் நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்தது. பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மைய...
ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...