திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். சுமார் 1 வருட காலம் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை அதன் பிறகு அவரது உடல் நிலை ஓரளவு தேறியது. இதையடுத்து 1 வருடத்துக்கு பிறகு முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி படங்களை பார்வையிட்டார். சமீபத்தில் தனது இல்லத்தில் கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யின் வீடு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ளது. இந்த நிலையில் கருணாநிதி நேற்று இரவு கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாளை சந்தித்தார்.இரவு 8.15 மணிக்கு சென்ற அவர் 9 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். பின்னர் அவர் அங்கிர...
வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் – பி.வாசு கிண்டல்

வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் – பி.வாசு கிண்டல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் - பி.வாசு கிண்டல் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நேற்று (ஜனவரி 15) மாலை இயக்குநர் பி.வாசு குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைத்தளத்தில் வெளியாயின. இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்களிலேயே அவர் நலமுடன் இருக்கிறார், வதந்திகளை கிளப்பாதீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திக்கு பி.வாசு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் என் வணக்கம். என்னைப் பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே அப்படி வாட்ஸ்-அப்பில் வந்தது. சிரித்துவிட்டேன். இன்று தான் உடற்பயிற்சி கூடத்தில் 6 கி.மீ நடந்துவிட்டு வந்தவுடன் தான் இச்செய்தியே வந்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரிப்பு வருகிறது. எத்தனை ...
மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பேரல் 70 டாலர்களை தொட்டதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு கண்டுள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதுபோலவே, டாலரின் மதிப்பு சரிந்து வருவதாலும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, 2014 டிசம்பரில் இதே விலையில் கச்சா எண்ணெய் விற்பனையானது. மூன்றாண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையாவதால், அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் ...
என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
என்னை கொலை செய்ய சதி - பிரவீண் தொகாடியா பகீர் "ராஜஸ்தானில் 2015-ம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பிரவீண் தொகாடியா பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும், அதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸார் என்னை கைது செய்ய வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பவர்கள் நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தான் எனது மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டேன். எனது குரலை நசுக்க சதி நடக்கிறது. நான் பேசக்கூடாது என சிலர் எண்ணுகின்றனர். என்னை கொலை செய்ய சிலர் இங்கு வந்துள்ளனர்’’ பிரவீண் தொகாடியா எனக்கூறினார். இதனிடையே, பிரவீண் தொகாடியா காணாமல் போன சர்ச்சை குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில போலீஸ் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் தலைவர்...
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம் . கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என மரணத்திற்கு முன்பு எழுத்தாளர் ஞானி தனது ஓ பக்கங்கள் வலைதளத்தில் கடைசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரது கடைசி வீடியோ பதிவு...     https://youtu.be/pz7iCqop5Cs
மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். ஒரிசா கடற்கரை தான் மணல் சிற்பத்துக்கு புகழ் பெற்றது. அங்கு அப்துல் கலாம், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மார்பளவில் உருவாக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் நிறுவப்ப...
சொகுசு கார் வரி ஏய்ப்பு விசாரணை அதிகாரிகள் முன் அமலா பால் ஆஜராகி விளக்கம்..!

சொகுசு கார் வரி ஏய்ப்பு விசாரணை அதிகாரிகள் முன் அமலா பால் ஆஜராகி விளக்கம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சொகுசு கார் வரி ஏய்ப்பு - நடிகை அமலா பால் ஆஜராகி விளக்கம். சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கேரளாவில் ஆடம்பர கார்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 13 சதவீதமே வரி வசூலிக்கப்படுவதால், கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது...
முதல்வர், துணை முதல்வர் இணைந்து  அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

முதல்வர், துணை முதல்வர் இணைந்து அலங்காநல்லூர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க காளைகள் சீறிப்பாய்ந்தன..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதலமைச்சர்-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். “ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்” என முதல்வர்...
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!

கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால் லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதை காண்பதற்காக கீர்த்திசுரேசுடன் அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் விஷால், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பை காண குடும்பத்தினர் வந்ததால் கீர்த்திசுரேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். கீர்த்திசுரேஷ் சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைக்கு வந்துள்ளது. இப்போது விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’ விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஏ.ஆர்.முரு...
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!

உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..! பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார் அவருக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல பெண்களை கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்...