ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் சினிமாவின் சுப்பீரியர் ஆபீசர் ஆகலாம் என ஆந்திராவில் போய் அமர்ந்து கொண்ட பெப்சி தலைவர் செல்வமணியின் ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. கொரானா ஊரடங்கால் முடக்கி வைக்கப்பட்ட தமிழ் திரையுலகில் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த சூழலில் அரசு பல்வேறு வகையான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திரையுலகில் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் ஷூட்டிங் பிந்தைய பணிகள் செய்ய அனுமதி தர தயாரிப்பாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சில கட்டுப்பாடுகளுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் செய்வதற்கு தயாராகும் நிறுவனங்கள் அதன் விவரங்களை பெப்சிக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்...
உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர். இதையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரானா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரானா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது. தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். சென்னைய...
கலெக்டர்களுடன் மே 13ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்!

கலெக்டர்களுடன் மே 13ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மே 13ம் தேதி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த திட்டம் தமிழகத்தில் கொரானா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரானா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டி...
மே 12ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க இரயில்வே துறை அறிவிப்பு

மே 12ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க இரயில்வே துறை அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மே 12ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க இரயில்வே துறை அறிவிப்பு.   கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடைமுறையில் உள்ள ஊரடங்கு மே17ம் தேதிக்கு பிறகு தளர்வுகளோடு ஊரடங்கு விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெயில்வே துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மே 12 ந்தேதி முதல் டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும். முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல் தொடங்கும். கொரானா தொற்று இல்லாமல் மாஸ்க் அணிந்து வருவோர் மட்டும் ரெயிலில் அனும...
எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். - பா.இரஞ்சித் அறிக்கை! உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது ந...
அடுத்தும் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி டிவிட் பதிவு சொல்லும் ரகசியம் – கோடங்கி

அடுத்தும் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி டிவிட் பதிவு சொல்லும் ரகசியம் – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அடுத்து தேர்தல் வந்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி சூசகம் ஊரடங்கு நேரத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் மதுக்கடைகளை மூட கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்த சூழலில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ""இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்"" *தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகள் பாருங்கள் என ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை மிக நாசுக்காக வெளிப்படுத்தி ...
எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு

எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கு எந்த வியாதியும் இல்லை - அமீத்ஷா அறிவிப்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் யாரோ விஷமிகள், அமித்ஷா தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை மற்றொரு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர் இதுகுறித்து அமித்ஷாவின் கவனத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர். இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து ...
மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? அதிமுக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! ~~~~~~~~~~~~~~~~~~ சென்னை உயர்நீதிமன்றம் மதுக் கடைகளை மே17 ஆம் தேதிவரை மூடுமாறு நேற்று உத்தரவிட்டதால் தமிழக மக்கள் சற்றே ஆறுதலடைந்தனர். இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனாவைப் பரப்புவதற்கு அதிமுக அரசு காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது கொரோனா அதிகமானால் அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்களோ என சந்தேகம் வலுக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுக் கடைகளைத் திறப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என உச்சநீதிமன்ற மனுவில் கூறியிருக்கும் தமிழக அரசு, மாநில அதிகாரங்கள...
இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், வைரஸ் தாக்கம் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. இந்தியா கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தான் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிற...
சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை, சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை, சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்டதால் வாலிபர் படுகொலை  செய்து சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் - வன்னியரசு கண்டன அறிக்கை   அறிக்கையில் அவர் கூறியிருப்பது: சாதிவெறி- குடிவெறியோடு வன்முறை-படுகொலை செய்த மனநோயாளி ராமதாசு கும்பல் ..................................................... முதல் நாள் முதல் கையெழுத்து என்று வாய்கூசாமல் தெரு தெருவாக கூவிக்கொண்டு அலைபவர் யார் என கேட்டால் கிடைக்கும் பதில் சாதிய மனநோயாளி ராமதாஸ் தான். பூரண மதுவிலக்கு என்று வாயளவில் சொல்வதோடு சரி. தமிழக அரசு இந்த கொரானா காலத்தில் மதுக்கடைகளை திறக்கும் போது பெயரளவில் ஓர் அறிக்கை அவ்வளவுதான். நீதிமன்றத்தில் கூட ஒரு போலியான வழக்கு தான். மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் எம்பி ஆனதால் மருத்துவர் அன்புமணி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு படுத்தே விட்டார். தமிழ்நாடு...