ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு - பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.ப...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது தமிழக அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியின் சமீபத்திய பல அதிரடி நடவடிக்கைகள் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் செயலாக மாறி உள்ளது. சேலம் நகர தியேட்டர் சிண்டிகேட் தொடங்கி ரேடியோவில் பாட்டு போடும் உரிமை வரைக்கும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து பல அதிரடிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் காட்சிகளுக்கு தயாரிப்பாளர் அனுமதி பெறவேண்டும் அவர்களை அழைத்து கவுரவபடுத்த வேண்டும் எனற கோரிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது. அதே போல ரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் போது அந்த பட தலைப்பை சொல்லும் போது தயாரிப்பாளர...
இனி இஷ்டம் போல யாரும் சினிமா விருது விழா நடத்த முடியாது… தயாரிப்பாளர் சங்க ஆலோசனை கமிட்டி திடீர் கட்டுப்பாடு..!

இனி இஷ்டம் போல யாரும் சினிமா விருது விழா நடத்த முடியாது… தயாரிப்பாளர் சங்க ஆலோசனை கமிட்டி திடீர் கட்டுப்பாடு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையிலான ஆலோசனை கமிட்டி நிர்வகித்து வருகிறது. இந்த ஆலோசனை கமிட்டி தமிழ் சினிமாவில் பல அதிரடிகளை தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில் சேலம் ஏரியா ரிலீஸ் விவகாரத்தில் இதுவரை இருந்த சிண்டிகேட் முறையை மாற்றி எல்லா படங்களும் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆக வழி செய்யப்பட்டது. இப்போது அடுத்த அதிரடியான முடிவாக சினிமா விருது விழாக்கள் நடத்துவதில் சில வழிமுறைகளை கமிட்டி உருவாக்கி உள்ளது. அதன் படி விருது விழா நடத்தும் எந்த நிறுவனமும் இனி இஷ்டம் போல எந்த விழாவையும் நடத்த முடியாது. அப்படியே நடத்தினாலும் விருதுக்கு தேர்வாகும் படங்களின் தயாரிப்பாளருக்கும் உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். அதோடு எந்தெந்த படத்தில் இருந்து விருதுக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்கிறார்களோ அந்தந்த படங்களின் தயாரிப்பாளரிட...
நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்துக்கு கோர்ட் உத்தரவு..!

நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்துக்கு கோர்ட் உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் விஜயகாந்த் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு* கடந்த 2012ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதால் அவர் மீது அன்றைய அரசு வழக்கறிஞர் அவதூறாக பேசியதாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் இதுவரை நடிகர் விஜயகாந்த்நேரில் ஆஜராகததால் வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் உத்தரவிட்டுள்ளார்...
குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்...! புதிய திரைப்படங்கள், இணைய சீரியல் பதிவுகளுக்கு அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5 என பல இணைய பிளாட்பார்ம்கள் செயல் படுகிறது. டிவி, சினிமாவுக்கு மாற்றாக இந்த முறை மிக பரவலாக வளர்ந்து வருகிறது. அதே நேரம் குறும்படங்கள், சினிமா வாய்ப்பு தேடுபவர்களுக்கு தனியாக எந்த வசதியும் இதுவரை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த குறையை போக்க ஷார்ட்பிளிக்ஸ் என்ற ஒரு தனித் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குறும்படங்களை யாரும் பதிவேற்றம் செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு அடுத்த உயர்வுக்கு வழி கிடைக்கும்....
மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்..!

மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மீண்டும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்..! நடிகர் அஜீத் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பல நேரங்களில் ஹீரோவாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ அஜீத் தான். அதைப் போலவே பைக் ரேஸ். இவை தவிர ஆளில்லா குட்டி விமானங்கள் ஓட்டுவது, ரிமோட் விமானங்களை இயக்குவது என பலவற்றை அஜீத் செய்து காட்டுவார். இப்போது சத்தமில்லாமல் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தயாராகி வருகிறார். கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜீத் கலந்து கொள்ள கடும் பயிற்சி பெற்று வருகிறார்....
சிறந்த குறும்பட இசையமைப்பாளராக  சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

சிறந்த குறும்பட இசையமைப்பாளராக சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சிறந்த குறும்பட இசையமைப்பாளர் என சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..! தினத்தந்தி நிருபர் முருகனின் மகன் சூர்யா என்ற ZATRIX இசையில் உருவான 'மேகம் செல்லும்' தூரம் தனி இசை குறும்பட பாடல் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடல் தற்போது 'சைமா' (SIIMA) குறும்பட போட்டியில் சிறந்த இசைக்கான விருதை வென்றுள்ளது. நாளைய இசையமைப்பாளருக்கு கோடங்கி இணைய தளம் சார்பில் வாழ்த்துகள்....
தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனுஷ்  பிறந்தநாளை பிறந்தானைமுன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ! நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த வி...
இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார். இந்த நிலையில், ஐந்தாவது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்....
டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு தன்னை பிரதமர் மோடி நாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் காட்டமாக நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறி உள்ளார். இது உண்மை என்றால், பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களையும், சிம்லா உடன்படிக்கையையும் காட்டிக்கொடுத்து விட்டார். பலவீனமான வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு, எதையும் சாதித்து விடாது. அவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து பிரதமர் கண்டிப்பாக நாட்டுக்கு கூற வேண்டும்” என கூ...