சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜனவரி 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரச...
60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட “மிஸ் அமெரிக்கா” அழகி

60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட “மிஸ் அமெரிக்கா” அழகி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், நடிகைகள்
  "மிஸ் அமெரிக்கா" பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்நத 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். செஸ்லி கிரிஸ்ட், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்தார்.   இந்நிலையில், தான் வசித்து வந்த 60 மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து செஸ்லி கிரிஸ்ட் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கட்டடத்தின் 29வது மாடியில் நின்று கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனால், அவர் கட்டடத்தின் 29வது மாடியில் இருந்தே கீழே குதித்து தற்கொலை செய...
விண்வெளியில் வசந்த விழா கொண்டாடும் சீனர்கள்!

விண்வெளியில் வசந்த விழா கொண்டாடும் சீனர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  ஜனவரி 31ஆம் நாள் சீன வசந்த விழாவுக்கான முந்தைய நாளாகும். விண்வெளியில் பயணிக்கிற சென்சோ-13 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் காணொளி மூலம் தாய்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 400கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சீனாவின் விண்கலத்தில் சீனர்கள் வசந்த விழாவை வரவேற்பது இதுவே முதன்முறையாகும். திட்டத்தின்படி, 2022ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்தைச் சீனா நிறைவேற்றவுள்ளது. எதிர்காலத்தில் மேலதிக சீனர்கள் விண்வெளியில் புத்தாண்டு மற்றும் சீன வசந்த விழாவைக் கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது....
வசந்த விழாவாக வரவேற்கப்படும் சீனாவின் புத்தாண்டு இன்று!

வசந்த விழாவாக வரவேற்கப்படும் சீனாவின் புத்தாண்டு இன்று!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    சீனாவின் புத்தாண்டு இன்று. அந்நாட்டில் சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல மாறுதல்கள் காணப்படுகின்றன. சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.   தொற்றுநோயால், புத்தாண்டுக்கு வீடு திரும்ப இயலாமல் மக்கள் மன வருத்தப்படுகின்றனர். சாதாரண காலங்களில், லட்சக்கணக்கான மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் என சீனாவில் பலரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு பயணிப்பார்கள். சீன மொழியில் ...
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… திக் திக் மனநிலையில் சாமானிய மக்கள்!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்… திக் திக் மனநிலையில் சாமானிய மக்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று  தனது நான்காவது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா 3வது அலையால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து துறையினரும் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. 2022 -23  ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இரண்டு அவைகளிலும் நேற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் தாக்கல் செய்வார்.   ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும். கடந்த ஓராண்டில் நாட்டின் பொருளாதாரம், எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான தீர்வுகள் குறித்த தகவல்கள் இதில் ...
ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா

ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா

HOME SLIDER, NEWS
  ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கடந்த 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அதனால் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாதென்றும் கூறி, தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க குற்றப்பிரிவுக்கு இன்று கடிதம் அளித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. தனது அக்கடிதத்தில், “எனக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். மீண்டும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து உள்ளேன். அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும் நான் விசாரணைக்கு ஆஜராகி...
சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் ச...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி! அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அதை ஏற்கவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு. க.வினர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிரடியாக வெளியிட்டனர். ...
“காவல்துறையில் கோட்சே வாரிசுகள்” திருமாவளவன் அறிக்கை

“காவல்துறையில் கோட்சே வாரிசுகள்” திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காந்தி நினைவுநாளில் கோவையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது அங்கு வந்த காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது அதிகார வரம்புமீறல் என்றும், காவல்துறையில் கோட்சே வாரிசுகள் என்றும் குறிப்பிட்டு, இது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவு நாளையொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும்அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றத...