ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்! பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்...
2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில்  யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு

2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      2021 சட்டமன்ற தேர்தல்... அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கெல்லாம் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கலாம், யாரையெல்லாம் விலக்கி வைக்கலாம் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது உறுதி என சொல்லப்படுகிறது. டெல்டாவை பொறுத்தவரை ஓ.எஸ்.மணியன் முதல்வருக்கு அபிமானமுள்ள நபராக இருக்கிறார். அதே போல் அதிமுக மீது எந்த குற்றச்சாட்டு வைத்தாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அமைச்சராவது உறுதி என்றே சொல்லப்படுகிறது ஏனென்றால் எல்லா தரப்பினருக்கும் அவர் முதல்வர் இடத்தில் இருந்து கொண்டு பதில் சொல்லி வருகிறார். அதே  போல் சமூக ர...
உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய கொரோனா பரவலில் இருந்தே இன்னமும் உலக நாடுகள் மீளாத நிலையில் இங்கிலாந்தில் உருவான புதிய வகை  உருமாறிய கொரோனா காரணமாக பிப்ரவரி மாதம்  வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக 2வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும்  துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக்குறிப்பில் முந்தைய கொரோனா பரவலை காட்டிலும் மிக வேகமாகவும், அதி தீவிரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உருமாறிய கொரோனா  பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தி...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில்  2ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சி...
தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி!

தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி! நேற்று காலை தாஜ்மகாலில் சுற்றுலாவாசிகளை போல் சுமார் பத்துப் பேர் நுழைந்தனர். தாஜ்மகாலுக்கு முன்பாக பார்வையாளர்கள் படம் எடுப்பதற்காக உள்ள நீண்ட பளிங்குக்கல் இருக்கையில் அமர்ந்தவர்கள், தாம் கொண்டுவந்த காவிக் கொடிகளை வெளியே எடுத்து அசைத்துக் காட்டினர். இதில் சிலர் ‘ஹர் ஹர் மஹாதேவ்!’ எனவும், ’ஜெய் ஸ்ரீராம்!’ என்றும் கோஷமிட்டனர். பிறகு அக்காவிக் கொடிகளை தாஜ்மகாலினுள் நாட்டவும் முயற்சித்துள்ளனர். இந்தக் காட்சிகளை இரண்டு வீடியோக்களாகவும் படம் எடுத்தவர்கள் உள்ளே இருந்தபடியே அதைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து, தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியான ஆக்ராவின் தாஜ்கன்ச் காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இதில் காவிக் கொடிகளை வீசிக் காட்டியவர்களுக்குத் தலைமை வகித்தவர் ஆக்ரா மாவட்ட இந்து ஜாக்ரன் மன்ச் தலைவரான கவுரவ் தாக்கூ...
105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை!

105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, வருகிற 12–ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்றே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருந்தது ஆய்வு மையம் தெரிவித்தது போல் தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்த...
“வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” – நடராஜன்

“வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” – நடராஜன்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், தமிழக வீரர் ‘யார்க்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட பிரகாசமான வாய்ப்பின் அறிகுறியாக டி.நடராஜன் இந்திய டெஸ்ட் சீருடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனையடுத்து நெட்டிசன்கள் தரப்பில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த ட்விட்டர் பதிவில், “வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரது ட்விட்டர் தளத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘தல அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நட்டு என்று அஜித் குமார் ஃபேன்ஸ் ரேஜ் என்ற ட்விட்டர்வாசி வாழ்த்துக் கூறியுள்ளார். இன்னும் ஒரு ரசிகர், ‘லாக்டவுன்ல நடந்த ஒரு நல்ல விஷயம் நீங்க இந்திய அணிக்கு போனது’ என்று பதிவி...
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதீய ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் தடுப்பூசி எடுத்து மக்களின் சந்தேகங்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதிகள் இதற்கு முன்னர் தடுப்பூசி எடுத்து கொண்டதை மேற்கோள்காட்டி இதை தெரிவித்தார்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கிற்கு , இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல்  இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இதனிடையே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம...
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..! தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கும் , பார்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ...