ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.   மத்திய உள்துறை அமைச்சர் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அவருக்கு கொரானா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என முதலமைச்...
மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்  கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார். கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும். கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்க‌க் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.    ...
கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி. கவர்னர் மாளிகை பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் கவர்னர 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில் இன்று காலை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவர்னர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கவர்னர் மாளிகை பாதுகாவலர்கள் பணியாளர்கள் 87 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  ...
கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார். இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார். தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்க...
கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று  தகனம் செய்த அவலம்!!

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று தகனம் செய்த அவலம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவலின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள் (வயது 80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார். மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற...
நாடே கொரானா வைரஸ் பீதியில் இருக்க அயோத்தி நகரமே  வண்ண விளக்குகளால் மின்னுகிறது!

நாடே கொரானா வைரஸ் பீதியில் இருக்க அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் மின்னுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அயோத்தியில் வரும் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நாளை அயோத்தி செல்கிறார். நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பூமி பூஜை நடைபெறும் தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் 1.25 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப் பட்டிருப்பதாக உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலே நகரம் முழுவதும் விளக்க...
“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி "அண்ணாத்தே"க்கு பைட் குடுக்க சர்ச்சை நாயக்கராக களமிறங்கிய கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன்! ரஜினியின் கபாலி பட ரிலீசுக்கு முன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இணையாக தாதா87 பட போஸ்டரில் தூக்கிக் கட்டிய லுங்கி, கருப்பு கண்ணாடி என தாதா கெட்டப்பில் சாருஹாசன் அசத்தினார். உலகிலேயே அதிக வயதில் ஹீரோயிச கேரக்டரில் நடித்து புதிய சாதனை படைத்தார். இப்போது மீண்டும் மிக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாருஹாசன். வட மாநிலத்தில் மிக பரபரப்பான அரசியல் தலைவராக இருந்த பால் தாக்ரே உருவ அமைப்பில் சாருஹாசனின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே மீண்டும் நாடு முழுக்க தன் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல்ஹாசனின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன். இந்த படத்தில் நாயக்கராக களம் இறங்குகிறார் சாருஹாசன். ஏற்கனவே அவர் தம்பி கமல்ஹா...
இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இளையராஜாவா?

இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இளையராஜாவா?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    இடப் பிரச்சினை.... அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இளையராஜாவா? பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான இடத்தில் தனது இசைக்கூடத்தை வைத்து இசையமைத்து வருகிறார். பல நூறு ஹிட் பாடல்கள் இங்கிருந்து தான் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் எல்.வி.பிரசாத் இருந்த போது இந்த இடத்திற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்கு பின் அவர் மகன்கள், அதன் பின் பேரன்கள் நிர்வாகத்தை கையில் எடுத்ததும் ஸ்டுடியோவில் பல மாற்றங்கள் செய்தனர். ஸ்டுடியோவில் இருந்து நீண்டகாலமாக வாடகைக்கு இருக்கும் இளையராஜாவை காலி செய்யும்படி நிர்வாகம் சார்பில் அழுத்தம் ...
பூசாரி உட்பட 17 பேருக்கு  கொரானா… பதற்றத்தில் அயோத்தி ராமர் கோவில் வளாகம்!

பூசாரி உட்பட 17 பேருக்கு கொரானா… பதற்றத்தில் அயோத்தி ராமர் கோவில் வளாகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அயோத்தி ராமர் கோயில் பூசாரி உட்பட பாதுகாப்பு போலீசார் 17 பேருக்கு கொரானா! அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரானா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தேடி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரானா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் பத்...
சீரியல் போல சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்!

சீரியல் போல சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சீரியல் போல சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்! சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். சென்னை பசுமை வழிச்சாலை, முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் டிவி சீரியல் ஷூட்டிங் போல சினிமா ஷூட்டிங் நடத்துவதற்கு அனுமதி அளிக்க கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்....