சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 என்று அறியப்படும் இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் தயாராகி வருகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்ட படப்பிடிப்பில் டெல்லி ஆக்ரா  உள்ளிட்ட இடங்களில் துரத்தல், சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.சண்டைக் காட்சிகளோடு யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....
லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்! பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் இவருக்கு பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ஜோடி. . இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இவர்களோடு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் லாஸ்லியாவின் அப்பாவாக நடிக்கிறார். அக்னி சிறகுகள், மாஸ்டர் உட்பட பல பெரிய படங்களில் JSK சதீஷ் படுபிசியாக நடித்து வருகிறார்....
மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்! மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இப்படத்தில் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரனவ்லால் உள்ளிட பலர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் வரும் மார்ச் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் கலைப்புலி தாணு வெளியிடவுள்ளார். தமிழில் ஆர்.பி.பாலா வசனத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திர புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வ...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார். கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை. பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குறைவாக...
ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் - சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது. படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 ...
கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று 'சகலகலா வல்லவன்' படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க.. ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு... கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான். துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க... கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க...
இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது....
இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தை சொல்லும் அற்புதமான திரைப்படம் கன்னிமாடம் - இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான படம் கன்னிமாடம். இந்த படம் ஆண்வகொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் 2வது வாரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் படம் பார்த்துவிட்டு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டிச் சென்றார். அதோடு இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட்டை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறும் போது: கன்னிமாடம் படம் இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான படம்....
முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...