இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.
படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து...









