வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்* *மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப்* தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர்...
ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே. பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது " பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்க...
“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு ! நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலு...
சும்மா கிழி கிழின்னு கிழிக்க இன்று ரிலீஸ் ஆகும் தர்பார் டிரைலர்..!

சும்மா கிழி கிழின்னு கிழிக்க இன்று ரிலீஸ் ஆகும் தர்பார் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சும்மா கிழி கிழின்னு கிழிக்க இன்று ரிலீஸ் ஆகும் தர்பார் டிரைலர்..! ரஜிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் டிரைலர் டிசம்பர் 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் முருகதாஸ் அறிவித்தார். இதனை முன்னிட்டு தர்பார் பட ஆக்சன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மும்பையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் தர்பார் டிரைலர் வெளியாகிறது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி உள்ளிட பலர் கலந்துகொள்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிரைலர் சும்மா கிழி கிழின்னு இருக்கும் என நம்புகிறார்கள்....
வடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்

வடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    விளையாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் படங்கள் தொடர்ந்து வந்தாலும் அதில் புதுசாக கதைக்களம் பார்க்கும் படங்கள் ரொம்ப குறைவு. சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் படம் விளையாட்டை தொட்டிருந்தாலும் முடிவை அழகாக சொல்லியிருக்கிறது. வடசென்னையில் வசிக்கும் மனோஜ் எப்படியாவது கால்பந்தாட்டத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்கிறார். ஒரு சூழலில் வடசென்னை தாதாவின் பழக்கத்தால் பாதை மாறி போக... திடீரென விளையாடும் போதே இறந்து போகிறார். அப்பாவை போல மகனும் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக வரும் நேரம் ஒரு சூழலில்அப்பாவின் மரணம் இயற்கையானது இல்லை. அவரை கொலை செய்தார்கள் என தெரிய வருகிறது. அப்பாவை கொலை செய்தவர்களை ஹீரோ விஷ்வா தேடி கண்டு பிடித்து பழி வாங்கினாரா? இல்லை வன்முறை பாதை வேண்டாம் விளையாட்டில் அப்பாவின் கனவை நனவாக்கும் வேலையை செய்தாரா? என்...
எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்

எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    சமீபத்திய ரிலீஸ் படங்களில் "அப்பாடா" ரொம்ப நாளைக்கு அப்புறமா திக் திக்குன்னு பகீர் ரக சினிமாவா வந்திருக்கு காளிதாஸ். த்ரில்லர் படத்துல இப்படியும் கிளைமாக்ஸ் வைக்க முடியும்னு "அடடே" போட வைச்சிருக்கார் இயக்குனர் ஸ்ரீ செந்தில். பரத் ஏற்கனவே பல படங்கள் மூலம் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் காளிதாஸ் புது அனுபவத்தை கொடுத்திருக்கும். திருமணம் ஆன இளம் போலீஸ் அதிகாரியின் உணர்வுகளை முடிந்த மட்டும் வெளிப்படுத்துகிறார். மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த ஹீரோயின் அன்ஷீட்டல் ரொம்பவே கவர்கிறார். அழகும் நடிப்பும் சரியாக இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம். சீனியர் போலிஸ் அதிகாரியாக வரும் சுரேஷ் மேனன். நல்ல சாய்ஸ். நடந்த தற்கொலை சம்பவங்களை கையில் எடுத்து அசால்ட்டாக விசாரிக்கும் பாணி ரசிக்கும் ரகம். இது போன்ற த்ரில்லர் படத்தில் வழக்கமான காட்டப்படும...
சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’

சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் 'பஞ்சராக்ஷ்ரம்' இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக 'பஞ்சராக்ஷ்ரம்' சூப்பர்நேச்சுரல் - சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', 'சந்திரமௌலி'  மற்றும் 'பொது நலம் கருதி' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இ...
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..!

இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் "பேப்பர் பாய்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது .இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் "பேப்பர் பாய்". இணை தயாரிப்பு G.C.ராதா இப்படத்தை இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய "ஸ்ரீதர் கோவிந்தராஜ்" இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்.... இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பேப்பர் பாய் படத்தின் ரீமேக் ஆகும். தமிழுக்கு தகுந்...
தேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”

தேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      " 35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவன் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர். கொலை செய்தவனை கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்த கொலைகளில் புதுமண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்?எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல்துறைக்கு பல அமானுஷ்யமான திகில்லான நிகழ்வுககளை பார்க்கின்றனர்? அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது. அதன் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. அது என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தாங்கி விரைவில் வர இருக்கும் படம் தான் ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிக்கும் " லோகா" படத்தின் கதை என...
லண்டன் ஏர்ப்போர்ட்டில் போலீசில் சிக்கிய பிரபல நடிகை..!

லண்டன் ஏர்ப்போர்ட்டில் போலீசில் சிக்கிய பிரபல நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘சண்டகாரி’ . R. மாதேஷ் இயக்குகிறார் .இந்தப்படத்தில் ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார் . விமல், ஸ்ரேயாவின் நிறுவனத்தில் எஞ்சினியராக பணிபுரிபவராக நடிக்கிறார், இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள மிகப்பெரிய ஏர்போர்ட்டான ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது, அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர்,, “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் ” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க, உடன் நடித்துக்கொண்டிருந்த விமல் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து தன்னிட...