புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை
புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மக்கள...









