வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க அரசு விதிகளின்படி வீட்டின் மதிப்புக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் செலுத்தியது தமிழக அரசு.
ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது
24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது
ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக நிலத்தை கையகப்படுத்தும் நடவ...









