கனா நாடு தாண்டி வெற்றி பெறுவதோடு சீனாவில் ஜெயிக்க வேண்டும் – சத்யராஜ் கனா இது..!
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ...









