பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!
பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி... இனி காமெடி படம்தானாம்..!
அஞ்சலி வரிசையாக பேய் படங்களில் நடித்து போர் அடித்து விட்டதாம்.
அதனால் கொஞ்ச காலம் பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி முடிவு செய்து இருக்கிறார். இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் குறிப்பாக காமெடி படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
அடுத்ததாக அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது...









