திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசின் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக்கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்ல...
கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அமைதி ஊர்வலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்கால் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைதிப்பேரணி நடைபெற்றது...
சவுக்கு “சாக்கடை”  சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா?  விளாசும் கோடங்கி

சவுக்கு “சாக்கடை” சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா? விளாசும் கோடங்கி

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
சவுக்கு "சாக்கடை" சங்கர் பத்திரிகையாளரா? புரோக்கரா? விளாசும் கோடங்கி   https://youtu.be/5bTpewEwtn4
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் ப...
1/2 கி.மீ.நீளத்துக்கு  தி.நகரில் பயணிகள் நடை மேம்பாலம் !

1/2 கி.மீ.நீளத்துக்கு தி.நகரில் பயணிகள் நடை மேம்பாலம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தி.நகர் ரெயில் நிலையம் - பஸ் நிலையம் இணைக்கும் வகையில் பயணிகள் நடை மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது.இங்கு ஜவுளி, நகை,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள ரெங்கநாதன் தெரு,மேட்லி சாலை,உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் திருவிழா கூட்டம் போல் மக்கள் தினமும் அலைமோதி வருகின்றார்கள். புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியது. இதற்காக தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடை மேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட...
தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார். இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்...
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்....
செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. இதில், மூன்று வெவ்வேறு அணிக்கு பங்கேற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இதன் மூலம், ரோனக் இந்தியாவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், தனது வெற்றியை பகிர்ந்துக் கொண்ட ரோனக் பயிற்ச்சியாளருக்கு நன்றி தெரிவித்தார்....
பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். 1993-ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இதை தொடர்ந்து மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் ...
செஸ் ஒலிம்பியாட் களை கட்டியது- பிரதமர் மோடி நாளை போட்டியை தொடங்கி வைக்கிறார்!

செஸ் ஒலிம்பியாட் களை கட்டியது- பிரதமர் மோடி நாளை போட்டியை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் மீது அந்த நாடு போர் தொடுத்ததால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர். எந்த நாட்டில் நடத்தலாம் என்று ஆய்வுகள் நடந்த போது செஸ் ஆட்டத்தின் தாயகமாக கருதப்படும் தமிழகத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்று தீர்மானித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தெரிவித்ததும் அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று உறுதி அளித்தார். இந்த போட்டிக்காக உடனடியாக அவர் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உற்சாக மூட்டினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் 15 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிற...