செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

சினி நிகழ்வுகள்

“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரட்சகன் படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் அமலாபால் சமீப காலமாக யோகாசன பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விசேஷ பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்கிறார். ஒரு மரத்தின் அருகில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அமலாபால் கூறியிருப்பதாவது:- “கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போடுவது மிகவும் கஷ்டமானது. எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன். இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்...
கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று செய்தி பரவுகிறது. அதை நிரூபிப்பது போலவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் காதலை ஒவ்வொரு மேடையிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் புகழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய படங்களை சமூகவலை தளங்களில் பதிந்து வருகிறார்கள் நயன்தாராவின் ஒரே பயம், திருமணம் செய்து...
வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!

வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன்,  கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல...
விஜய் இடத்தை பூர்த்தி செய்த விஜய் ஆண்டனி

விஜய் இடத்தை பூர்த்தி செய்த விஜய் ஆண்டனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று `டிராஃபிக் ராமசாமி' அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை  இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது, " இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ, எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி, நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எ...
தமிழ் சினிமாவில் உருவாகும் புது புரூஸ்லீ…!

தமிழ் சினிமாவில் உருவாகும் புது புரூஸ்லீ…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். முளையூர் ஏ.சோணை இப்படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேறும் போது, ஒரு இளைஞர் அச்சு அசலாக “புரூஸ் லீ” போலவே மேடையேற அரங்கமே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முதலில் பேசியது இயக்குநர் முளையூர் ஏ.சோனை தான். மனிதர் 18 வருட காத்திருப்பில் கிடைத்த மேடை என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே பேசினார். அவர் பேசியதாவது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் ...
ஞானவேல் ராஜாவோடு கை கோர்த்த சிவகார்த்திகேயன்..!

ஞானவேல் ராஜாவோடு கை கோர்த்த சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, "ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில...
அஜித் கால்ஷீட் வாங்கவே சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்..!

அஜித் கால்ஷீட் வாங்கவே சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
 நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள். இவருக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள். அதுபோல் இயக்குனர் சுசீந்திரனும் அஜித் சார் எனக்கு உதவினார் என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்தார். அதில், “நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக...
சினிமா மீது எனக்கு வெறி –  புது முகம் ராஜன் தேஜேஸ்வர்

சினிமா மீது எனக்கு வெறி – புது முகம் ராஜன் தேஜேஸ்வர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே...   ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.. அவரிடம் பேசிய போது..... எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக   வெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார். எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும...
ரஜினி நடிக்கும் காலா படத்தின் செம வெயிட் பாடல்

ரஜினி நடிக்கும் காலா படத்தின் செம வெயிட் பாடல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூன் 7ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் மே 9ம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ‘செம வெயிட்’ என்ற சிங்கிள் பாடலை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 7 மணிக்கு செம வெயிட் பாடல் யூடியூப்பில் பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. https://youtu.be/_kPbMBMxKdg...
இணையதளத்தில் வெளியான விஜய் பட காட்சிகள் அதிர்ச்சியில் படக்குழு..!

இணையதளத்தில் வெளியான விஜய் பட காட்சிகள் அதிர்ச்சியில் படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுடன், பைக்கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள். அந்த காட்சியின் புகைப்படத்தையும், வீடியோவையை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது. அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்...