ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

சினி நிகழ்வுகள்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்று  வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால...
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்தார்..!

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்தார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் மலையாள நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்து உள்ளார். ‘யாஹூ’ வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான, இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்துப் பேர் கொண்ட பட்டியலை வெளியிட் டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை காவ்யா மட்டும்தான்.   தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா வுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக் காத ஒரு கௌரவம் காவ்யவிற்கு கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அதிக அளவிலான படங்களிலோ, வெற்றிப் படங்களிலோ நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனை அதிகம் இணையத்தில் தேடியதற்குக் கார ணமும் கூறப்படுகிறது. பாவனா கடத்தல், பாலியல் கொடுமை வழக்கிலும் காவ்யா மாதவன் பெயர் அதிகம் சிக்கியது. காவ்யா மாதவன் சொல்லித்தான் பாவனாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. கா...
ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள்..!

ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜெய் நடித்து ஆண்டுக் கணக்கில் தயாரிப்பில் இருக்கும் ‘பலூன்’ படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந் தப் படத்தைத் தொடர்ந்து ‘பார்ட்டி’ படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்திலும் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக் கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது....
ரஜினிகாந்தை அவமதிப்பதா?-ஞானவேல்ராஜாவுக்கு தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் கண்டனம்

ரஜினிகாந்தை அவமதிப்பதா?-ஞானவேல்ராஜாவுக்கு தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்த் என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு, அடையாளம், நம்பிக்கை. இந்த...
செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்..!

செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது. அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத் தொடங்கும் என்றும் கலாசாரம் மற்றும் தகவல் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030-ஆம் ஆண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். பழமைவாத இஸ்லாமிய ராஜ்ஜியம், 1970 களில் திரையரங்குகளைக் கொண்டிருந்தது, ஆனால் அவற்றை மூடுமாறு மதகுருக்கள் அதிகாரிகளை வற்புறுத்தி மூடவைத்தனர். கடந்த ஜனவரியில், மூத்த மதகுரு ஷேக் அப்துல் அஸீஸ் அல் அல்-ஷேக், திரையரங்குகளை அனுமதித்தால், அவை ஒழுக்கநெறிகளை சீர்குலைக்கும் என்று...
அனுஷ்கா டெக்னிக்கை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

அனுஷ்கா டெக்னிக்கை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்குப் பிறகு பாகுபலி படத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். பாகுபலி படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காட்டியது எப்படி என்று அனைவருக்கும் தெரியும். பாகுபலி படத்தில் கிராஃபிக்ஸ் மூலம் அவரை உடல் எடை மெலிந்தது போல காட்டினார்கள். இந்நிலையில் தற்போது நடிகை  கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் அவரை உடல் எடை கூட்ட  சொன்னார்கள். ஆனால் கீர்த்தி இதற்கு நோ சொல்லிவிட்டாராம். வேறு வழியில்லாமல் தான் இப்படி ஒரு முடிவாம். இதனால்  இப்படத்தில் அவரை கிராஃபிக்ஸ் மூலம் சற்று உடல் எடை கூட்டியது போல காண்பிக்கிறார்களாம். ஏற்கனவே இதில்  சமந்தாவும் நடித்து வரும் நிலையில் அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்கிறார்களாம். மேலும் மகாநதி படத்தை மார்ச் 29-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள...
பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்

பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர். மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவ...
கவர்ச்சி உடையில் கலக்கிய ஐஸ்வர்யாராய்

கவர்ச்சி உடையில் கலக்கிய ஐஸ்வர்யாராய்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில் 2 வேடங்களில் வித்தியாசமாக தோன்றி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். இதையடுத்து இந்திபட உலகில் முன்னணி நடிகையானார். அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 44. இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விதம்விதமாக கவர்ச்சி உடை அணிந்து சென்று அனைவர் பார்வையும் தன் மீது விழச் செய்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இரவு வி...
அரசியல் முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்

அரசியல் முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில், மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68-வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தால் இப்படி கொண்டாடுவார்கள். நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. எனது தாய், தந்தை பிறந்தது கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிகுப்பம் தான். எனவே, நானும், ரஜினியும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் தான். இன்றும் நாச்சிக்குப்பத்தில் தான் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த...
ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!

ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (டிசம்பர் 12, 1950), மராட்டிய மாநிலத்தில் பிறந்தார்.  கண்டக்டராக தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். அவர் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்' படத்தின் இரண்டாவது பாகமான `2.0' படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் `காலா' படமும் உருவாகி வருகிறது. இதில் `காலா' படத்தின் இரண்டாவது கவரிகையை தனுஷ் இன்று வெளியிட்டார் ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட ...