விமர்சனம்
A1 பட கோடங்கி விமர்சனம்
அக்ரஹாரத்து மாமிக்கும் லோக்கல் பையன் சந்தானத்துக்கும் காதல் வந்தால் என்ன ஆகும் அப்படின்னு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.
ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தானம் அடுத்தவங்களை இம்ச பண்ணாம காமெடி அதுவும் ரசிக்கிற மாதிரி படம் நடிச்சிருக்கிறது படத்துக்கு பெரிய பிளஸ்.
வசனங்களிலும் நையாண்டி ரசிக்கும் படி இருந்ததும் படத்துக்கு பிளஸ்.
வழக்கமாக சந்தானம் படங்களில் எல்லா பிரேம்யும் சந்தானமே நின்னு ஆடி ரன் எடுக்காம அவுட் ஆவார்... ஆனால் இந்த படத்தில் கூட நடிச்ச பலரையும் காமெடியில அடிச்சி ஆட ஸ்பேஸ் குடுத்து படத்தை வெற்றிப் படமா தக்க வைச்சிகிட்டார் சந்தானம்.
கதாநாயகி தாரா அலிஷா பெரி அக்ரஹாரத்து மாமி. கச்சிதமா சில இடங்களில் பொருந்துகிறார். பல இடங்களில் ரசிக்கலாம்.
எவ்வளவு தான் நேர்மையான மனிதராக இருந்தாலும் அவங்க பர்ஸ்னல் விஷயத்தில் எங்காவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும்னு ஹீ...
ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும்.
இதுவரை சொல்லப்படாத கதை... என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி.
8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.
தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார்.
கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார்.
பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி ப...
சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்
காதுல பூ வைக்கலாம்... தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ... மூச்சு திணறி செத்துற மாட்டாளா...
அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம்.
கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க... தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது.
கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வ...
Kolaikaran movie selfie review by Kodanki
Kolaikaran selfie review by Kodanki #VijayAntony #Arjun #nazar #Aashima #seetha #Kolaigaran
#Kodankiselfiereview
#vijayantony #Dhananjayang #akarjunofficial
#கொலைகாரன் #கொலைகாரன்திரைவிமர்சனம்
https://youtu.be/18DKGqKzFmg
தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்
ஹீரோயினுக்கு அழகான பேய் புடிச்சா அது தேவி ... அதேநேரம் கதாநாயகனுக்கு பேய் புடிச்சா அதுவும் ஒண்ணு இல்ல இரண்டு பேய் புடிச்சா... அட அதாங்க தேவி 2
தேவில மும்பைக்கு வேலைக்கு போற பிரபுதேவா மனைவி தமன்னா மீது அகால மரணமடைந்த நடிகையின் ஆவி புகுந்து அதன் பிறகு நடக்கும் களேபரங்கதான் காட்டப்பட்டது.
தேவி 2 அதேட தொடர்ச்சியா இருந்தாலும் வித்தியாசம் காட்டனுமில்ல...
அதனால ஜோசியத்த நம்பி மொரிஷியஸ் நாட்டில் வேலைக்கு போகிறார் பிரபுதேவா. கூடவே மனைவி தமன்னாவும்...
அங்கே போனதும் இனி மனைவி தமன்னாவை எந்த ஆவியும் பிடிக்காதுன்னு சந்தோஷமாகிறார்.
ஆனா தமன்னாவுக்கு பிரபுதேவா மேல சந்தேகம்... ஒரு கட்டத்தில் பிரபுதேவா மேல இரண்டு ஆவிகள் இருப்பதை கண்டு பிடிக்கிறார்.
அதை வெளியேற்ற வக்கீல் கோவை சரளாவுடன் சேர்ந்து தமன்னா செய்கிற சேட்டையில் ஆவிகள் ஓடியதா... இல்லியா எனபதுதான் தேவி 2 கதை.
...
தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்
தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. - கோடங்கி விமர்சனம்
அதீத எதிர்பார்ப்பு... பிரமாண்டமான விளம்பரங்கள் பெரும்பாலான நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தை தரும்... அந்த ரகம் தான் சூர்யாவின் என்.ஜி கே.
சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது.
ஒரு வரி கதை என்னமோ கேக்க நல்லா இருக்கு... இதே மாதிரி படித்த இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டாங்களான்னு மனசு கெடந்து அடிச்சிகுது...
ஆனா அதான் நிஜத்துல நடக்குறதில்லியே... அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நடக்கும் எதிர்பாத்தா ஏமாத்தம் தான் மிஞ்சினது...
சூர்யா-செல்வராகவன் கூட்டணி இப்படி ஒரு லைன் கதைய என்.ஜி.கேவுல...
தேவராட்டம் – விமர்சனம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்து கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘தேவராட்டம்’.
இப்படத்தினை கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.
”மதுர தான் எங்க அடையாளம்
மதுரைக்கே நாங்கதான் அடையாளம்” .. இது தான் வில்லன் பெப்சி விஜயனோட டயலாக்...
மதுரை மண்ணின் முக்கிய ரெளடியாக வலம் வருகிறார் இவர். பல வருட தவத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் பிறக்கிறார். இதனால், பெப்சி விஜயன் தன் மகன் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கிறார்.
வேல ராமமூர்த்திக்கு ஆறு பெண் குழந்தைகள் ஒரு ஆண் மகன். ஆண் மகனாக பிறக்கிறார் கெளதம் கார்த்திக். ஒரு கட்டப் பஞ்சாயத்து பிரச்சனையில் பெப்சி விஜயன் வேல ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார்.
இதனால் தாயாக இருந்து தம்பி கெளதம் கார்த்திக்கை வளர்க்கின்றனர் ஆறு அக்காள்களும். சட்டம் படிக...



