புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார். சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா. சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்....
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?! https://youtu.be/2XXptfI4VIo
மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது. இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காட்சிகள் பாண்டிசேரியில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்....

மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய வேந்தர் மூவீஸ் பார்ட்னர்!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய வேந்தர் மூவீஸ் பார்ட்னர்! பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பான தயாரிப்பு நிறுவனமாக இருந்த வேந்தர் மூவீஸ் பட நிறுவனத்தில் இணைப் தயாரிப்பாளராக இருந்தவர் பாலா. இவர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். ஆடம்பரமில்லாமல் இன்று பாலா தயாரிக்கும் படத்தின் துவக்க விழா நடந்துள்ளது. தேஜாயூ என பெயரிடப்பட்ட புதுப்படத்தை ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பாக விஜய பாண்டி என்பவர் பெயரில் இவர் தயாரிக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்....
சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஈஸ்வரன் படத்தில் சிம்பு வைத்திருப்பது கிராபிக்ஸ் பாம்பு தான் என கூறிய இயக்குனர் சுசீந்திரனிடம் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரி கூறியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரிலேயே சிம்பு கழுத்தில் பாம்பு இருப்பது போன்றும் அதை சிம்பு கைகளால் பிடித்து இருப்பது போலவும் ஒரு புகைப்பட பதிவு வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வனத்துறை மத்தியில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது போல ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியது, அதாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாம்பை சிம்பு கையால் பிடித்து சாக்கு பையில் போடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  மிகவும் வைரல் ஆகியது. இந்நிலையில் வனவிலங்குகளை துன்புறுத்துவதாக கூறி...
இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஜெய்!

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்தில்  இசையமைப்பாளராகவும் தனது திறமையை ஜெய் வெளிப்படுத்த உள்ளார். நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் ,வடகறி,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற‌ அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத்,காளி,பால சரவணன்,முத்துக் குமார் உள்ளிட்ட ...
தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சாயிஷா தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சாயிஷா  வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதனையடுத்து தமிழ், தெலுங்கு,, கன்னடம்  ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனையடுத்து  தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாயிஷா தெலுங்கில் 60 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .போயப்படி சீனு இயக்கும் இந்த படத்தினை  துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.சமீபத்தில்  இந்த படத்தின் படப்ப...
Vetrimaran releases First Look of Endravadhu Oru Naal, a film based on real-life incidents!

Vetrimaran releases First Look of Endravadhu Oru Naal, a film based on real-life incidents!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Vetrimaran releases First Look of Endravadhu Oru Naal, a film based on real-life incidents! It is no secret that today, the public loves films that showcase stories that are based on real-life. One such film that is now being made is Endravadhu Oru Naal. Directed by debutant Vetri Duraisamy, the film's story has been developed by beautifully and skillfully stringing together several real-life incidents that have been reported in the media. The screenplay of this film highlights the deep bond man shares with his farm animals and deals with a number of issues ranging from displacement caused by globalisation to water scarcity, child labour and the challenges that lie before the downtrodden masses that are hoping for a better tomorrow. Set in the Kongu region of the s...
வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
  வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் ம...