ஜனவரி கடைசியில் ரிலீஸ் ஆக உள்ள சார்லி சாப்ளின் 2
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2"
இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.
கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ,ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, ,பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி ...









