MOVIES
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..!
வாழ்வில் மாற்றத் “தை”
தொழிலில் ஏற்றத் “தை”
வசதியில் உயரத் “தை”
உலகுக்கு வீரத் “தை”
தேவையான பணத் “தை”
அளவில்லாத செல்வத் “தை”
எல்லாரோடும் சமாதானத் “தை”
எப்போதும் சந்தோஷத் “தை”
குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும்,
நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும்.
இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..!
அன்புடன்
கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
‘இந்தியன் 2’ பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!
'இந்தியன் 2' பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது '2.0' இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தின் காட்சி உருவாக்கத்தில் ஓவியத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை சமீபத்திய திரைப்படங்கள் மூலம் நிரூபித்தவர் விஸ்வநா...
தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்....
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி....
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி
‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்...
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’
சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்புல்லான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்...
காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பாலாவின் 'நாச்சியார்’ ரிலீஸ்..!
பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.
நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வ...
ரசிகர்களோடு ‘சொடக்கு’ பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!
ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது.
குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்
கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.
அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட...
வெள்ளித்திரையில் இந்திரா காந்தி ஆக மாறப்போகும் வித்யா பாலன்..!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன்
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்...

