வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

MOVIES

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர் .படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவர...
பீச்சாங்கை நடிகரின் தெருக்கூத்து கலையை சொல்லும் புதுப்படம்!

பீச்சாங்கை நடிகரின் தெருக்கூத்து கலையை சொல்லும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீச்சாங்கை" பட  நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த  நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக  ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்பாடாத இப்படம், 1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் ராதிகா மாஸ்டர்,சன்டைப்பயிற்சி வீரா,M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத்தயாரிப்பாக  ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்க,  படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை. முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது  இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள ...
பரபரப்பாகும் யோகிபாபுவின் தர்மபிரபு ஷூட்டிங்..!

பரபரப்பாகும் யோகிபாபுவின் தர்மபிரபு ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரி...
கதிர்-சிருஷ்டி டாங்கே ஜோடியின் ரொமான்ஸ் ஆக்‌ஷன் “சத்ரு” மார்ச் 1ம் தேதி ரிலீஸ்!

கதிர்-சிருஷ்டி டாங்கே ஜோடியின் ரொமான்ஸ் ஆக்‌ஷன் “சத்ரு” மார்ச் 1ம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
 ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம்,ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “  இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா,மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம்,ரகுநாத், கீயன், சாது,குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.     ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி  இசை  -  அம்ரிஷ்  பாடல்கள்   -  கபிலன்,மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே  கலை  - &nb...
பூமரங் டீம் மீண்டும் இணைகிறது..!

பூமரங் டீம் மீண்டும் இணைகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள் இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம். மேலும், பூமராங் முடியும் முன்பாகவே ...
சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'மிஸ்டர் லோக்கல்' படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறதுஇதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பதிவு செய்துள்ளது. https://twitter.com/SF2_official/status/1094196651936239616?s=19 சமீபத்திய ரிலீஸ் படமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ச...
சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு  கொடுத்த நயன்தாரா..!

சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு கொடுத்த நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்....
வர்மா படத்திலிருந்து விலகியது ஏன்? – இயக்குனர் பாலா விளக்கம்

வர்மா படத்திலிருந்து விலகியது ஏன்? – இயக்குனர் பாலா விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து...