வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.
வன்னியர் கல்வி அறக்கட்டளையையும், அதைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், மீட்டெடுத்து, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்(பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) வாரியத்தில், 04.02.2019 அன்று, தமிழ்நாடு, அரசிதழில் வெளியிடப்பட்ட, சட்டம் 44/2018 ன் படி, இணைத்திட, கோரும் மனு.
******
விடுநர்,
இராம.நாகரத்தினம்-- தலைவர்-- வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம்.???? 9444068943.
பெறுநர்,
மாண்புமிகு,
தமிழக முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.600009.
பொருள்:-
தமிழகம் உள்ளிட்ட, உலக வன்னியர்களிடம் பெறப்பட்ட, நிதியிலிருந்து, பதிவு செய்து, ஆரம்பிக்கப்பட்ட, வன்னியர் கல்வி அறக்கட்டளையும், அதனைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன், சட்டம் 44/2018 ன் அடிப்படையில்,...









