புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர்.   அப்போது, ​​பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்...
சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு!

சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பிற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 31,150 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலுக்காக 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப...
வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது. காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது. வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது....
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப் பதிவு மையத்திற்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலினும் தமது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகள் மூலமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். ராணுவம் வரக் கூடிய அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடை பெறவில்லை. தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் போராட்டம் நடத...
கருப்பு மாஸ்க் சிவப்பு கார் திமுக ஆதரவு குறியீடுகளுடன் விஜய் வாக்களித்தார்!

கருப்பு மாஸ்க் சிவப்பு கார் திமுக ஆதரவு குறியீடுகளுடன் விஜய் வாக்களித்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் எளிமையாக வந்து தனது வாக்கை செலுத்தினார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் நடிகர் விஜய் காலையிலேயே வந்து வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்கு செலுத்தியிருந்தார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அப்போது பேசப்பட்டது.  சமூக ஊடகத்திலும் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்த வீட...
வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR   https://youtu.be/8BYgd0SpkQI
தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர், 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்து, தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது என்று கூறினார். இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி  போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது. கூட்டணியில் அத...
இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12 ஆயிரத்து 604 வார்டு பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் போல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களிடம் தங்களின் வாக்குறுதிகளை கூறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதன்பிறகு வேட்பாளர்கள் தங...
வேதா  இல்லத்தை வாங்கும் திட்டமில்லை டெபாசிட் தொகை 68 கோடியை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்- தமிழக அரசு!

வேதா  இல்லத்தை வாங்கும் திட்டமில்லை டெபாசிட் தொகை 68 கோடியை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்- தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்  செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட  வேதா  இல்லத்திற்கு  இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான  வரி  பாக்கி  ரூ.36.9  கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.  மனுக்களை விசாரித்த நீதிபதி,  அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வரு...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ...