செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25
Shadow

தமிழக அரசியல்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  பதவி ஏற்றார் பிரியா!

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார். மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங்கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேயர் அணியக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு கமி‌ஷனர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்களுக்கு தங்க சங்கிலி அணிவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக மேயர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அந்த தங்க சங்கிலி வங்கியில் ...
தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவருக்கு எதிராக கோஷமிட்டதாக கைது செய்யப்பட்ட சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநரும், அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், அங்கிருந்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோபியா மீது விமான நிலைய அதிகாரியிடம் தமிழிசை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் சோபியாவை கைது செய்தனர் இந்த வழக்...
அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி – மதுரை போஸ்டர் கலாட்டா

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி – மதுரை போஸ்டர் கலாட்டா

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
மதுரை மாநகராட்சி 88-வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 88வது வார்டு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக சகுந்தலாவும், அதிமுக சார்பில் பிரேமாவும், அமமுக, பாஜக, நாம்தமிழர், மக்கள் இயக்கம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உள்ளிட்ட எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்த அதிமுக வேட்பாளர் பிரேமா 1,187 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். மதுரை மாநகராட்சி 88வது வார்டு திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. "இதனால்...
அஜீத்துக்கு அரசியல் ஆசை இல்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

அஜீத்துக்கு அரசியல் ஆசை இல்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போடுகிறது. அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதனிடையே வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதா நினைவு நாளிலும் திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வெளியானது. இதனால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.   இதனால் அஜித் குறித்த அரசியல் செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இந்நி...
கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்போது போல கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர். இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இரு...
மீண்டும் பரபரப்பு வளையத்திற்கு வந்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் விவகாரம்!

மீண்டும் பரபரப்பு வளையத்திற்கு வந்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் விவகாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஹரி நாடாராகிய நான் யாருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது எனது தனிப்பட்ட உரிமை. அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அதை ராக்கெட்ராஜா முடிவு செய்யக்கூடாது. எனக்கும் என் மனைவி ஷாலினிக்கும் என்ன கருத்து வேறுபாடு என்பது எங்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் தான் யாருடன் வாழ வேண்டும் என்பதை தான் தான் முடிவு செய்வேண்டுமே தவிர ராக்கெட்ராஜா முடிவு செய்ய கூடாது என்றும், தனது குடும்ப பிரச்சனையில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது என ஹரி நாடார் சிறையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவி ஷாலினியுடன் வாழ விருப்பம் இல்லாததால்தான் மஞ்சுவை காதலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பண மோசடி வழக்கில் ஹரி நாடார் கைதாகி ஒறுபுறம் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், வெளியில் அவரது காதலி ...
யாருக்கு எந்த பதவி… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

யாருக்கு எந்த பதவி… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
யாருக்கு மேயர், துணைமேயர், நகராட்சித்தலைவர் பதவிகளை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்றது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நிறைவுற்றதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்...
ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலம...
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். ‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன். பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன். என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோ...
பல இடங்களில் டெபாசிட்டே காலி… ஒத்த ஓட்டு பாஜக 3வது பெரிய கட்சியா? பாஜகவை வெளுத்த திருமாவளவன் எம்.பி

பல இடங்களில் டெபாசிட்டே காலி… ஒத்த ஓட்டு பாஜக 3வது பெரிய கட்சியா? பாஜகவை வெளுத்த திருமாவளவன் எம்.பி

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தங்களை மூன்றாவது பெரிய கட்சி என பாஜக கூறிகொள்வதை விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பல இடங்களில் பாஜக டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்றும் ஒத்த ஓட்டு பாஜக என்றும் குறிப்பிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் சமய சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்எல்ஏக்கள் சின்னத்துரை, அப்துல் சமது,  சிபிஐ தேசிய குழு உறுப்பினர் சி. மகேந்திரன்,  திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்...