செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25
Shadow

தமிழக அரசியல்

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி  வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கபாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவார்கள். உக்ரைன்-ரஷியா இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவியபோதே அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் 5பேர் மும்பைக்கும் 5பேர் டெல்லிக்கும் தனித்தனி விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர் இவர்கள் நேரடியாக அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர் இவர்களுக்கான கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நி...
வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம்  முதலமைச்சர் பேச்சு!

வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைனில் ரஷிய படைகள் 3-வது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து  வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய மு.க.ஸ்டாலின், அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர்  , அவர்கள் அன...
சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக!

சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக!

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. அதிமுக-வுக்கு சுமார் 25 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், மாநகராட்சிகளில் 7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநகராட்சிகளில் 43.59 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. நகராட்சிகளில் 43.49 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 41.91 சதவீத வாக்குகளையும் திமுக பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் அதிமுக 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நகராட்சிகளில் 26.86 சதவீத ...
புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவானது ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் இன்ற...
மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைப்பற்றி உள்ளது. அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய் மக்கள் இயக்கம். இந்த வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா சுயேட்சையாக போட்டியிட்டு  337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்....
உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
தேர்தலில் தோல்வியடைந்த கானா பாலா!

தேர்தலில் தோல்வியடைந்த கானா பாலா!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல்
  தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்றிலும் தி.மு.க. வெற்றிகளை குவித்து வருகிறது. இதை தி.மு.க கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த வார்டில் கானா பாலா 6095 வாக்குகள் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்தவர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்....
தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர்.   அப்போது, ​​பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்...
சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு!

சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பிற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 31,150 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலுக்காக 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப...
வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது. காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது. வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது....