மின் வெட்டு, பெட்ரோல் டீசல் இல்லை, விண்ணை முட்டும் விலைவாசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு அழிவின் விளிம்பில் இலங்கை!
இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரு நாட்களுக்கு டீசல் வாங்க யாரும் வர வேண்டாம் என சிலோன் பெட்ரோலிய நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மருந்துகள் இல்லை.. நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு என கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .
எரிபொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்தி மையங்களில், மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனைகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கும் சூழல் நிலவுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு ...









