மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!
மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு... அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!
கொரானாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ பொருளாதாரசரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரானா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார்.
இதையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், அவ...









