டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும்போது,
"டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர். தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில், இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.
துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன், தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று ...









