சனிக்கிழமை, மே 23
Shadow

HOME SLIDER

பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் விஷால்  நடித்து வருகிறார். இதில் `இரும்புத்திரை' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது. `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட...
`குலேபகாவலி’ டிரைலர் நாளை வெளியீடு..!

`குலேபகாவலி’ டிரைலர் நாளை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’.     புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்  தயாரித்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவேக் - மெர்வின் இசையில், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்...
பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்தனர். ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகமாக பெற்ற டி.டி.வி.தினகரனுடைய இந்த வெற்றி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள தன்னுடைய...
சன்னி லியோன் நடிக்கும்  ‘வீரமாதேவி’

சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் பல படங்களில் கலக்கி வரும் சன்னி லியோன், தற்போது நடிக்க இருக்கும் தமிழ் படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக, இப்படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பதற்காக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பில் கடைசி எழுத்தை மட்டும் வெளிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் பல கோணத...
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக கட்டி...
2 ஜி வழக்கின் தீர்ப்பு  சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

2 ஜி வழக்கின் தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு உருவானது. அதன் பின்னர்ஆ. ராசா கோவில்பாளையம் வழியாக காரில் அன்னூர் சென்றார். கோவில்பாளையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும் போது, 2 ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் இல்லை என நிரூபணமாகி இருக்கிறது. நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் உண்மை தன்மையை புரிந்துள்ளனர் என பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 2 ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்....
புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
லக்னோவில் இருந்து சவுதி அரேபியா நாட்டு விமானம் இன்று மாலை புறப்பட்டு செல்லும்போது ஏற்பட்ட திடீர் கோளாறினால் ஓடுபாதையில் ஸ்தம்பித்து நின்றது. இதனால், 9 விமானங்களின் வருகை - புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. சவுதி அரேபியா நாட்டுக்கு சொந்தமான சவுதி ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ரியாத் நகருக்கு புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து சென்று உயரக் கிளம்பும் முன் விமானி திடீரென்று ‘பிரேக்’ போட்டார். இதனால், விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள முன் சக்கரம் ஸ்தம்பித்தது. அந்த விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றது. இந்த சம்பவத்தினால் விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், ஓடுபாதையின் குறுக்கே சவுதி விமானம் நின்றதால் லக்னோவில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் டெல...
ஜெ., மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

ஜெ., மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20–ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தது. விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம் புகார் தெரிவித்தார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, பொது அமைதிக்க...
ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகரில் தி.மு.க தோற்றது, தி.மு.க.வின் செயல்பாடு, பணப்பட்டுவாடா, தினகரன் வெற்றி என பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்து ஓட்டு கேட்டால் போதாது. ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு, அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை,...

ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..? குருமூர்த்தி ட்வீட்டும் அதற்கு ஜெயக்குமார் பதிலடியும் தொடர்கதையாகி வருகிறது. இம்பொடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் சொல்ல, அதற்கு பதிலடியாக புறம்போக்கு என்பதற்கு விளக்கம் சொல்லியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புறம்போக்கு என்றால் ஆங்கில அகராதியில், Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable என்று போட்டுள்ளது. தமிழில் சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம் என்று போட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள...